பாதுகாப்பினை விரும்பும் இந்தியர்கள்- ஜேடி பவர்

0
பாதுகாப்பு மற்றும் நவீன வசதிகளை விரும்பும் இந்தியர்கள். புதிய வாகனங்களை வாங்கியிருப்பவர்களை கொண்டு வாகனத்தில் எதிர்பார்த்த வசதிகள் இருகின்றதா மேலும் என்ன வசதிகள் தேவை போன்றவற்றை கேட்டறிந்து வெளியிடப்படும் சர்வே ஜேடி பவர் சர்வே ஆகும்.

ஜேடி பவர் ஆசிய பசிஃபிக் நிறுவனம் நடத்திய  APEAL 2014(Automotive Performance, Execution and Layout) சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

சர்வே எடுக்கும் முறை;

Google News

புதிதாக வாகனம் வாங்கியவர்களிடம் 10க்கு அதிகமான முக்கிய விவரங்களை கொண்ட கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். வாகனத்தின் தோற்றம், உட்கட்டமைப்பு, செயல்திறன், பாதுகாப்பு, இருக்கை வசதி, ஏசி, சொகுசு தன்மை, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் எரிபொருள் சிக்கனம் போன்றவற்றை கனக்கீட்டு 1000 மதிப்பெண்களுக்கு எவ்வளவு பெறுகின்றது என்பதனை கொண்டு வரிசைப் படுத்துவார்கள்.

பாதுகாப்பான கார்

பாதுகாப்பிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனராம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.

jd power survey

கார் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சொல்லும் மைலேஜை விட 23 % குறைவாக கிடைக்கின்றதாம். புதிய கார்களில் நவீன பாதுகாப்பு வசதிகள் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் போன்றவற்றை பெரிதும் விரும்புகின்றனாராம்.

சிறந்த மூன்று கார்கள் ;

ஹோண்டா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தலா இரண்டு பிரிவில் முதலிடம் வகிக்கின்றது.

எம்பிவி சந்தையில் டொயோட்டா இன்னோவா முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டு  மற்றும் இடங்களில் எர்டிகா மற்றும் போலிரோ உள்ளது.

எஸ்யூவி சந்தையில் நிசான் டெரோனோ முதலிடத்திலும் அதனை தொடர்ந்து இரண்டாம்  மற்றும் மூன்றாம் இடங்களில் ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி 500 உள்ளது.

முழுமையான விவரங்களை படத்தில் கானலாம்.

2014 JD Power APEAL