ஹோண்டா நிறுவனம் பார்முலா 1 பந்தயங்களில் மீண்டும் வருகிற 2015 முதல் மெக்லாரன் காருக்கு எஞ்சின் சப்ளை செய்ய உள்ளதை உறுதி செய்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார பின்னடைவால் விலகியது. 1988 முதல் 1992 வரை மெக்லாரன் நிறுவனத்துக்கு எஞ்சின் சப்ளை செய்தது. இந்த காலகட்டங்களில் 4 முறை பட்டங்களை வென்றுள்ளது. தற்போழுது மெக்லாரன் நிறுவனத்துக்கு மெர்சிடிஸ் எஞ்சின்களை சப்ளை செய்து வருகின்றது.
தற்பொழுது பார்முலா 1 விதிகள் மாற்றப்பட்டுள்ளதால் 1.6 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு எஞ்சின்களை மெக்லாரன் நிறுவனத்துக்கு அளிக்கும். இதன் மூலம் ஹோண்டா மீண்டும் ஃஎப் 1 பந்தயங்களில் களமிறங்குகின்றது.