புதிய ஃபோர்டு ஃபிகோ கார் எப்பொழுது

0
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய  ஃபிகோ கார் இந்தியாவிற்க்கு வரும் டிசம்பர் 2015யில் வரவுள்ளதாக தெரிகின்றது. புதிய ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் கார் ஃபிகோ ஆஸ்பயர் வடிவத்தினை பெற்றிருக்கும்.

ஃபோர்டு ஃபிகோ கார்
ஃபோர்டு ஃபிகோ கார் 

வரும் ஆகஸ்ட் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள ஃபிகோஆஸ்பயர் செடான் காரின் பெரும்பாலான வசதிகளை பெற்ற காராக புதிய ஃபிகோ விளங்கும்.

வரவிருக்கும் ஃபிகோ காரிலும் 80பிஎச்பி ஆற்றலை தரவல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் இருக்கும்.  5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆஸ்பயர் காரில் உள்ளது போல தானியங்கி கியர்பாக்ஸ் வரவாய்ப்புகள் மிக குறைவு.

மேலும் வாசிக்க ; ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் முழுவிபரம்
   
                                        ஃபோர்டு எண்டெவர் எஸ்யுவி விபரம்

புதிய ஃபிகோ கார் முந்தைய மாடலை விட முற்றிலும் மாறுபட்ட முகப்புடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதி கொண்ட காராக விளங்கும்.

ஃபோர்டு ஃபிகோ கார்

புதிய ஃபிகோ ஆஸ்பயர் செடானை தொடர்ந்து ஃபிகோ விற்பனைக்கு வரும். மேலும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யுவி மற்றும் ஃபோர்டு மஸ்டங் கார் விற்பனைக்கு வரவுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ கார்
Ford Figo hatchback spied
image source : gaadi