புதிய கார்கள் 2016 – செடான்

0

2016ம் ஆண்டில் வரவுள்ள புதிய கார்கள் விலை , விபரம் வருகை போன்ற விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். புதிய செடான் கார் பிரிவில் காம்பேக்ட் முதல் பிரிமியம் வரை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா ஜீக்கா கார்
டாடா ஜீக்கா கார்

1. டாடா ஸ்வே

டாடா ஜீக்கா காரினை அடிப்படையாக கொண்ட மாடலாக வரவுள்ள ஸ்வே காரில் ஜீக்கா காரில் உள்ள 1.2 லிட்டர் ரெவோட்ரான் மற்றும் 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும்.

Google News

வருகை : ஜூலை 2016

விலை : 4.50 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : ஃபிகோ ஆஸ்பயர்

[nextpage title=”போலோ”]

2. ஃபோக்ஸ்வேகன் போலோ செடான்

ஃபோக்ஸ்வேகன் போலோ காரினை அடிப்பையாக கொண்ட பூட் நீட்டிக்கப்பட்ட மாடலாக வரவுள்ள செடான் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களை பெற்றிருக்கும்.

volkswagen-polo

வருகை : மே 2016

விலை : 6.50 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : ஃபிகோ ஆஸ்பயர் , எக்ஸ்சென்ட் , அமேஸ் , டிசையர்

[nextpage title=”டிசையர்”]

3. மாருதி டிசையர் ஏஎம்டி

மாருதி டிசையர் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் வரும் ஜனவரி மாத மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2015 Maruti DZire Facelift

வருகை : ஜனவரி 2016

விலை : 7 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : டாடா ஸ்வே

[nextpage title=”எட்டியோஸ்”]

 

4. டொயோட்டா எட்டியோஸ்

புதிய டொயோட்டா எட்டியோஸ் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் வரவாய்ப்புகள் உள்ளது. என்ஜின் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்காது தோற்றம் மட்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கும்.

etios-xclusive-b

வருகை : ஆகஸ்ட் 2016

விலை : 6.50 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : எக்ஸ்சென்ட் , அமேஸ் , டிசையர்

[nextpage title=”ஹோண்டா அமேஸ்”]

5. ஹோண்டா அமேஸ்

புதிய ஹோண்டா அமேஸ் கார் சில தோற்ற மாற்றங்களுடன் இ கிளட்ச் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது. என்ஜினில் எந்த மாற்றங்களும் இருக்காது.

Honda-Amaze

வருகை : நவம்பர் 2016

விலை : 6 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : எக்ஸ்சென்ட் , எட்டியோஸ் , டிசையர்

[nextpage title=”டொயோட்டா வயோஸ்”]

6. டொயோட்டா வயோஸ்

எட்டியோஸ் காருக்கு மேலாகவும் கரோல்லா காருக்கு கீழாக நிலைநிறுத்தப்பட உள்ள டொயோட்டா வயோஸ் செடான் கார் வரலாம்.

toyota vios front

வருகை : அக்டோபர் 2016

விலை : 10 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : சிட்டி , வெர்னா

[nextpage title=”ஹூண்டாய் எலன்ட்ரா “]

7. ஹூண்டாய் எலன்ட்ரா

புதிய தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா காரில் சிறப்பான கூடுதல் வசதிகளுடன் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். மேலும் 2.0 லிட்டர் என்ஜின் ஆப்ஷனும் கூடுதலாக வரலாம்.

2016-Hyundai-Elantra-leaked

வருகை : பிப்ரவரி 2016

விலை : 15 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : ஜெட்டா , ஆக்டேவியா , கரோல்லா

[nextpage title=”ஸ்கோடா சூப்பர்ப்”]

8.  ஸ்கோடா சூப்பர்ப்

MQB  தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிரிமியம் செடான் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரவுள்ளது.

new-skoda-superb

வருகை : பிப்ரவரி 2016

விலை : 28 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : பஸாத் , அக்கார்டு ,கேமரி

[nextpage title=”அக்கார்டு”]

9. ஹோண்டா அக்கார்டு

புதிய தலைமுறை ஹோண்டா அக்கார்டு கார் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட பல நவின அம்சங்கள் மற்றும் ஹைபிரிட் ஆப்ஷனை பெற்றுள்ளது.

2016-Honda-Accord

வருகை : பிப்ரவரி 2016

விலை : 29 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : பஸாத் , சூப்பர்ப் ,கேமரி

[nextpage title=”பஸாத்”]

10. ஃபோக்ஸ்வேகன் பஸாத்

மிக சிறப்பான சொகுசு வசதிகளுடன் வந்துள்ள புதிய ஃபோக்ஸ்வேகன் பஸாத் காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.

vw passat

வருகை : ஏப்ரல் 2016

விலை : 30 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் :  சூப்பர்ப் ,கேமரி , ஆடி ஏ4