Categories: Auto News

புதிய டொயோட்டா இன்னோவா முக்கிய விவரங்கள்

வரவிருக்கும் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவி கூடுதலான வசதிகள் மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும். இன்னோவா காரின் விலை ரூ.1.0 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை விலை கூடுதலாக இருக்கும்.
fd90e toyota2binnova

இந்தியாவின் எம்பிவி சந்தையில் முதன்மையாக விளங்கும் இன்னோவா சிறப்பான சொகுசு தன்மை , பாதுகாப்பு தரமான என்ஜின் மற்றும் பாகங்கள் போன்ற அம்சங்களால் இந்திய வாடிக்கையாளர்களின் மனதில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

கடந்த 2005 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்த டொயோட்டா இன்னோவா பெரிதான மாற்றங்கள் இல்லையென்றாலும் சில தோற்ற மாற்றங்களை கண்டது.

தற்பொழுது உருவாகி வரும் புதிய தலைமுறை இன்னோவா முந்தைய மாடலை விட சில கூடுதலான அம்சங்கள் மற்றும் நவீன வசதிகளை பெற்றிருக்கும்.

புதிய இன்னோவா தோற்றத்தில் பெரும்பலான பகுதிகளை கரோல்லா அல்டிஸ் காரில் இருந்த பெற்றிருக்கும் என தெரிகின்றது. இதனால் மிக ஸ்டைலிசான தோற்றத்தில் இன்னோவா விளங்கும்.

உட்புறத்திலும் அல்டிஸ் காருக்கு நிகரான டேஸ்போர்டு மற்றும் பிரிமியம் வசதிகளான தொடுதிரை அமைப்பு , குரோம் ஃபினிஷ் டேஸ்போர்டினை கொண்டிருக்கும். மேலும் முந்தைய தலைமுறை மாடலைவிட சிறப்பான சொகுசு தன்மை மற்றும் இட வசதி வழங்கும் வகையில் இருக்கைகள் உருவாக்கப்பட்டிருக்கும்.

புதிய GD வரிசை என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரிசை என்ஜின்தான் டொயோட்டா இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனரில் பயன்படுத்த உள்ளனர்.  மிக சிறாப்பான எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் இந்த என்ஜின் உருவாக்கப்பட்டிருக்கும். ஆற்றலும் அதிகப்படியாக இருக்கும். 6 வேக மெனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்சிலும் கிடைக்கும்.

முன்பக்க காற்றுப்பைகள் தவிர பக்கவாட்டிலும் காற்றப்பைகள் பெற்றிருக்கும்.

டொயோட்டா இன்னோவா கார் விலை ரூ .11 லட்சத்தில் தொடங்கி 17 லட்சம் வரை எக்ஸ்ஷோரும் விலை இருக்கும்.

image credits : flywheel
விற்பனையில் உள்ள இன்னோவா இன்னும் சில மாதங்களில் உற்பத்தி முடிவுக்கு வருகின்றதாம். புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா  அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் சந்தைக்கு வரும்.

All New Toyota Innova gets new style and more Safety features