புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் காரின் அதிகார்வப்பூர்வ படத்தினை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் எலன்ட்ரா முந்தைய மாடலை விட சிறப்பான தோற்றத்துடன் கூடிய நவீன அம்சங்களை பெற்றிருக்கும்.
2016 ஹூண்டாய் எலன்ட்ரா |
6வது தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா காரின் தோறத்தில் புதிய வடிவமும் உட்புறத்திலும் புதிய வசதிகளை பெற்றிருக்கும்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள LA மோட்டார் ஷோவில் காட்சிக்கு வரலாம். அதனை தொடர்ந்து இந்திய சந்தையில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016ம் ஆண்டில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.
வெளியிடப்பட்டுள்ள ஹூண்டாய் எலன்ட்ரா படத்தில் அறுகோண வடிவ முகப்பு கிரில் பக்கவாட்டில் மிக நேர்த்தியான வளைவுகள் , வின்டோவை சுற்றி குரோம் இன்ஷர்ட் என ஒட்டுமொத்த தோற்றத்தில் பிரிமியம் லுக்கினை பெற்றிருக்கும்.
இந்தியாவில் முந்தைய என்ஜின்களே மேம்படுத்தி பொருத்தப்பட்டிருக்கலாம் என தெரிகின்றது. இந்த ஆண்டில் இறுதியில் விற்பனைக்கு வரும் எலண்ட்ரா விற்பனைக்கு வரவுள்ளது அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இந்தியாவிற்க்கு வரலாம்.
New Hyundai Elantra sketch Revealed