ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி காரை சான்டா ஃபீ பிரைம் என்ற பெயரில் தோற்ற அமைப்பில் மேம்படுத்தி , பல கூடுதல் வசதிகள் மற்றும் என்ஜின் ஆற்றலை அதிகரிக்கப்பட்ட சான்டா ஃபீ எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சான்டா ஃபீ காரின் முகப்பு பம்பர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய புராஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் பனி விளக்குகள் , முகப்பு ஸ்லாட்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய விங் மிரர் , ரியர் பம்பர் மாற்றப்பட்டுள்ளது. டெயில் கேட் விளக்குகள் எல்இடி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இன்டிரியர் தோற்றத்தில் மேம்படுத்தியுள்ளனர். மேலும் 8 இஞ்ச் தொடுதிரை அமைப்பு ஸ்மார்ட் நேவிகேஷன் அமைப்பு, பார்க்கிங் அசிஸ்ட் , 360 டிகிரி கேமரா , எமர்ஜென்சி பிரேக் உதவி மற்றும் 10 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
முந்தயை 2.0 லிட்டர் மற்றும் 2.2 லிட்டர் என்ஜின் ஆற்றலை மேம்படுத்தியுள்ளனர். 2.0 லிட்டர் 186பிஎஸ் (முந்தைய ஆற்றல் 150பிஎஸ்) மற்றும் 2.2 என்ஜின் ஆற்றல் 202பிஎஸ் (முந்தைய ஆற்றல் 197பிஎஸ்) ஆகும்.
இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.
2016 Hyundai Santa Fe facelift unveiled