புதிய 125சிசி ஹோண்டா பைக் வருகின்றதா ?

0
ஹோண்டா மோட்டார்சைக்கிள் புதிய 125சிசி பைக்கினை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. சிபி ஷைன் பைக்கிற்க்கு மாற்றாகவோ அல்லது அதற்க்கு மேலாக இந்த புதிய 125சிசி பைக் விற்பனைக்கு வரலாம்.

125சிசி ஹோண்டா பைக்

தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள இந்த பெயர் தெரியாத பைக் 125சிசி பைக் சந்தையில் உள்ள பைக்குகளை விட சற்று பிரிமியம் தோற்றத்தில் அமைந்திருக்கும்.

தன்னுடைய முன்னாள் பாட்னரின் ஹங்க மாடலின் முகப்பு விளக்கின் தோற்றத்தினை பெற்றுள்ளது. மேலும் சிபி யூனிகார்ன் 160 மற்றும் பதிதாக வந்த லிவோ போன்றவற்றில் இருந்து பல பாகங்களை பெற்றிருக்கலாம் என தெரிகின்றது.

Google News
125சிசி ஹோண்டா பைக்

எச்இடி நுட்பத்துடன் வரவுள்ள புதிய 125சிசி பைக்கின் மைலேஜ் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த பைக்கில் முன்பக்கம் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டிருக்கும்.

மேலும் வாசிக்க ; ஹோண்டா லிவோ பைக் 

இந்த புதிய 125சிசி பைக்கிற்க்கு போட்டியாக பஜாஜ் 125எம் , டிவிஎஸ் ஃபீனிக்ஸ் மற்றும் யமஹா எஸ்எஸ் 125 பைக் போன்றவை  விளங்கும் . வரும் பண்டிகை காலத்தினை ஒட்டி மிக விரைவில் விற்பனைக்கு வரலாம்.

Upcoming Honda new 125cc bike

image Source