புதுச்சேரியில் இன்று முதல் இரண்டு மாற்றங்கள்

0

மே 1ந் தேதி முதல் புதுச்சேரியில் தினமும் பெட்ரோலிய பொருட்கள் விலை சந்தையின் மதிப்புக்கு ஏற்ப மாறும் , இதுதவிர இன்று முதல் புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகும்.

petrol diesel

Google News

புதுச்சேரி

  • இன்று முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகும்.
  • இன்று முதல் புதுச்சேரி உள்பட 5 நகரங்களில் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாறும்.
  • தினசரி பெட்ரோலிய பொருட்கள் விலை சில பைசாக்கள் மட்டுமே மாறலாம்.

விபத்துகளை தடுக்கும் நோக்கில்  தினமும் இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான சாலைப் பயணத்தினை மேற்கொள்ளுமாறு புதுச்சேரி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பைக் ஓட்டி மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் கண்டிப்பாக அணிய வேண்டும் வாகனம் ஓட்டிச் செல்லும் போது மொபைல் போன் பேசக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Motorcycle Helmet Blue 1

பெட்ரோலிய பொருட்கள் விலை

இந்தியாவில் முதற்கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர்,  ஜெம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் என மொத்தம் 5 மாநிலங்களில் உள்ள 200 பங்க்குகளில் தினமும் மாறும் வகையிலான பெட்ரோலிய பொருட்களின் விலையை அறிமுகப்படுத்தி உள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் விலையை தினமும் மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ள நிலையில், இந்த நகரங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்திய பிறகு ஏற்படும் சிக்கல்களை ஆய்வு செய்து, படிப்படியாக மற்ற முன்னணி நகரங்கள் மற்றும் நாடு முழுவதும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சர்வதேச சந்தையில் நிலவுகின்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படடையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தும்.  தற்போது நாடு முழுவதும்  பெட்ரோல், டீசல் விலை மாற்றம் 15 நாளுக்கு ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் மற்றும் மற்ற பெட்ரோலிய பொருட்கள் விலையில் தினமும் சில பைசாக்கள் வரை மாற்றமடையும் என்பதனால் பாதிப்பு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

PETROL PUMP

புதுச்சேரியில் இன்று (1/05/17) பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.03 ரூபாய் குறைந்து 66.05 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 19 பைசா குறைந்து 58.70 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.