பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது

0

தானுந்துகளில் அதிகப்படியாக பயன்படுத்தும் எரிபொருள்களில் பெட்ரோல் மற்றும் டீசல் முன்னிலை வகிக்கின்றது. பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறப்பான தேர்வாக அமையும் என காணலாம்.

petrol car vs diesel car tamil
This article First  Published at Feb 21 , 2013 … இது மேம்பட்ட பதிவாகும்.
மேலும் தற்பொழுது மாற்று எரிபொருள் பயன்பாடும் அதிகரித்தே வருகின்றது. மாற்று எரிபொருள்கள் சிஎன்ஜி,எல்பிஜி, மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மேலும் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும் வாகனங்களும் வரவுள்ளன.

பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?

பெட்ரோல் சிறந்ததா ? டீசல் சிறந்ததா ? என கேள்வி கார் வாங்கும் அனைவருக்குமே இருக்கும். இந்த சந்தேகத்தினை முழுமையாக பல விவரங்களை கொண்டு மிக தெளிவான முடிவினை எடுக்கலாம்…வாருங்கள்…
Suzuki Swift
கார் விலை பெட்ரோல் கார் ஆனது டீசல் காரை விட விலை குறைவாக இருக்கும். இது பற்றி சிறிய விளக்கத்திற்க்காக மட்டும் செவ்ரலே பீட் காரை பயன்படுத்தலாம்.
பேஸ் மாடல்கள் பீட் பெட்ரோல் கார் விலை 3.90 இலட்சம்.(சென்னை விலை 22.02.13) பீட் டீசல் கார் விலை 4.75 இலட்சம்.(சென்னை விலை 22.02.13)
பெட்ரோல் காரை விட டீசல் கார் குறைந்தபட்சம் 1 இலட்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும்.
இது ஆரம்ப கட்ட முதலீடு மட்டுமே.. எரிபொருள் விலை எரிபொருள் விலை இதுபற்றி சொல்லவே தேவையில்லை இன்னைக்கு ஒரு விலை நாளைக்கு ஒரு விலை என தங்க விலை நிலவரம் போல ஆகிவிட்டது.
பெட்ரோல் விலை எப்பொழுதுமே அதிகமாகத்தான் இருக்கும். குறைந்தபட்ச ரூ 10 வித்தியாசம் இருக்கத்தான் செய்யகின்றது.. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 70.61 லிட்டர் டீசல் விலை ரூ 60.23
celeriocar
ஒரு சின்ன கணக்கு..
பெட்ரோல் காரின் சராசரி மைலேஜ் 12- 15kmpl ஆகும். நாம் 14 கீமி மைலேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் பெட்ரோல் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம். 14x 1000லி = 14000 கீமி பயணிக்கலாம்.
மொத்தம் ரூ 72,170 சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய ரூ 5.15 ஆகும். டீசல் காரின் சராசரி மைலேஜ் 18-24 kmpl ஆகும். நாம் 20 கீமி மைலேஜ் வைத்துக்கொள்ளலாம்.
1000 லிட்டர் டீசல் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம். 20x 1000லி = 20000 கீமி பயணிக்கலாம். மொத்தம் ரூ 51,230 சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய ரூ 2.56 ஆகும்.
maruti suzuki shvs ddis 200 engine
பெட்ரோல் காரில் சிக்கன நடவடிக்கை இவ்வாறு எடுக்கலாம்..
பெட்ரோல் கார்களில் ஒரு கூடுதல் வசதி உள்ளது ரூ 50,000-60,000 செலவு செய்து சிஎன்ஜி கிட் அல்லது எல்பிஜி கிட் இனைத்துக்கொள்ளலாம். பயன்படுத்தி கிட்கள் 25000-30000 த்திற்க்குள் கிடைக்கும். இதன் மூலம் எரிபொருள் செலவினை குறைக்கலாம். எல்பிஜி எரிபொருள் செலவு 1 கீமி- ரூ 1.50 ஆகும். சிஎன்ஜி எரிபொருள் செலவு 1 கீமி- ரூ 1 ஆகும். நாடு முழுவதும் பரவலாக கேஸ் ஃபில்லிங் நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. கேஸ் இனைப்புகளை டீசல் காரில் பயன்படுத்த இயலாது. பராமரிப்பு செலவு பராமரிப்பு மிக அவசியமான ஒன்று வாகனங்களின் செயல்திறன்,
தேவையற்ற பழுதுகள் என பல பிரச்சனைகளுக்கு நிவாரனமாக இருக்கும். பெட்ரோல் காரை விட டீசல் கார் பராமரிப்பு செலவுகள் சில ஆயிரம் கூடுதாக இருக்கும். பெட்ரோல் கார்களில் தற்பொழுது ஜீரோ பராமரிப்பு நுட்பங்கள் கூட வர தொடங்கியுள்ளது. டீசல் கார்கள் பராமரிப்பு செலவுகளை குறைக்கவும் பல நவீன நுட்பங்களை புகுத்தி வருகின்றனர்.

கார் பயன்பாடு

பயன்பாட்டின் சில காரணிகளை வைத்தும் எரிபொருள் வகையினை தேர்ந்தேடுக்கலாம். தினந்தோறும் பயனிப்பவர்கள் அதாவது சராசரியாக வாரத்தில் 1000 கீமி பயன்படுத்தபவராக இருந்தால் பெட்ரோல் காரை தேர்ந்தேடுக்கலாம். எதனால் என்றால் பராமரிப்பு செவுகளில் உங்களை அதிகம் பதம் பார்க்காது.
வாரத்துக்கு 250 கீமி பயன்படுத்துபவராக இருந்தால் டீசல் காரை தேர்ந்தேடுக்கலாம். நெடுஞ்சாலை பயணம் அதிகம் செய்பவர்கள் டீசல் கார் வாங்கலாம். நகரங்களில் அதிகம் பயன்படுத்துபவர்கள் பெட்ரோல் காரை முயற்சிக்கலாம்.
விளக்கம்(1000 கீமி பொதுவாக எடுத்துக் கொள்ளப்பட்டள்ளது) பெட்ரோல் கார் என்றால் சராசரியாக 70 லிட்டர் (மைலேஜ் 14கீமி)தேவைப்படும். பெட்ரோல் செலவு 5000, பராமரிப்பு செலவு 3000 வரலாம். டீசல் கார் என்றால் சராசரியாக 50 லிட்டர் (மைலேஜ் 20கீமி)தேவைப்படும். டீசல் செலவு 2600, பராமரிப்பு செலவு 4500 வரலாம்.
renault kwid
சராசரியாக இரண்டுமே ஒரளவு சமாமாகத்தான் வர முயற்சி செய்யும் ஆனால் டீசல் கார் பயன்பாடு கூடும் பொழுது பராமரிப்பு செலவு கூடும். பெர்பாமன்ஸ் பெட்ரோல் கார் ஆனது டீசல் காரை விட வேகம் கூடுதலாக இருக்கும். ஆனால் டீசல் காரில் மிகுந்த டார்க் கிடைக்கும்.பெட்ரோல் காரில் டார்க் குறைவாக கிடைக்கும்.
மறு விற்பனை செய்யப்படும்பொழுது பொழுது பெட்ரோல் கார்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.
டீசல் கார் சற்று குறைவாகத்தான இருக்கும். 5 வருடங்களுக்கு மேல் டீசல் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொல்லைகள் அதிகம் இருக்கும். ஆனால் பெட்ரோல் காரில் குறைவாக இருக்கும். மேலும் சில பெட்ரோல் காரில் குறைவான சத்தம் வெளிப்படுத்தும்,டீசல் காரில் சற்று அதிகமான சத்தம் வரும்.
Maruti Alto 800
ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை
பெட்ரோல் அல்லது டீசல் எதுவாக இருந்தாலும் சராசரியாக இறுதியில் சமாமாகத்தான் முயற்சிக்கும். அதன் இயல்புதன்மைக்கு ஏற்ப சிலவற்றை கூடுதலாக தரும். இவற்றையும் கடந்த மாற்று எரிபொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

*இக்கட்டுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மைலேஜ்,விலை விபரங்கள், கணக்கீடுகள் அனைத்தும் தோராயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

Google News
 mahindra scorpio
This article First  Published at Feb 21 , 2013 … இது மேம்பட்ட பதிவாகும்.