எளிமையாக பைக் கியர் மாற்றுவது எப்படி ?

0

மிக எளிமையாக பைக் கியர் மாற்றுவது எப்படி ? பைக் கியர் மாற்றும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன ? என்பதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.  பெரும்பாலான பைக்குகளில் 4 அல்லது 5 கியர் , அதிகபட்சமாக 6 கியர் வரை இருக்கின்றது.

Bajaj Dominar 400 red

பைக் கியர் மாற்றுவது என்பது பலரும் அறிந்தே ஒன்றே ஆனால் அதனை முறைப்படி பழகி கொள்வதனால் மிக சிறப்பான பைக் ரைடிங் அனுபவத்தை பெற ஏற்றதாக அமையும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது.. அல்லவா ?

பைக் கியர் அடிப்படை தகவல்

அனைத்து மேனுவல் பைக்குகளிலும் பொதுவாக இடது புறத்தில் அமைந்துள்ள கிளட்ச் லிவர் மற்றும் இடது கால் பகுதியில் அமைந்துள்ள கியர் ஷிஃப்டர் கொண்டே கியர்களை மாற்றுவோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.. வலது பக்கம் திராட்டில் மற்றும் முன்பக்க பிரேக் லிவர் கால்பகுதியில் பின்பக்க பிரேக் அமைப்பும் அமைந்திருக்கும்.

பெரும்பாலான பைக்குகளில் கியர் வரிசை

 • 5th gear
 • 4th gear
 • 3rd gear
 • 2nd gear
 • NEUTRAL
 • 1st gear

கியர் மாற்றும் முறை ?

 1.  கியர் மாற்றுவதற்கு முன்னதாக அடிப்படையாக ஒவ்வொரு நிறுவனமும் மாறுபட்ட கியர் ஷிஃப்ட் அமைப்பினை கொண்டிருக்கும் என்பதனால் நியூட்ரல் அதனை தொடர்ந்து முதல் கியர் மற்றும் கியர் எண்ணிக்கை போன்றவற்றை கவனமாக தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.
 2.  மிக முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால் ஓவ்வொரு கியர்களுக்கான சராசரி வேகம் எவ்வளவு இருக்க வேண்டும். எந்த வேகத்தில் எந்த கியர் மாற்றலாம் என்பதனை தெரிந்துகொள்வது நல்ல பலனை தரும்.
 3. கியர் எண்ணிக்கை மற்றும் அமைப்பை தெரிந்த பின்னர் முதல் கியரை மாற்றுவதற்கு முன்னதாக கிளட்ச் லிவரை பிடித்து பின்னர் கியர் மாற்றும்பொழுது படிப்படியாக கியர் எண்ணிக்கையை உயர்த்தி கொள்ள வேண்டும்.
 4.  கிளட்ச் லிவரை ரீலிஸ் செய்யும்பொழுது திடீரென அல்லாமல் மிக மெதுவாக ரிலீஸ் செய்து கொண்டே வலதுபக்க கைகளில் உள்ள திராட்டிலை மெதுவாக கொடுக்க தொடங்கினால் பைக் நகரும்.
 5.  வேகமாக கிளட்ச் லிவரை விடவோ அல்லது அதிகப்படியான திராட்டிலை ஆரம்பத்தில் கொடுப்பதனை தவிரக்க வேண்டும்.
 6. ஆரம்ப கால பயற்சிகளில் கியர்களை மிக பொறுமையாக மாற்றி பயில்வது சிறப்பானதாகும்.

தொடர்ச்சியான பயிற்சி மட்டுமே பைக் கியர் மாற்றுவதை கற்றுகொள்ள ஏற்ற பாடமாகவும் , மற்றவர்களின் அனுபவம்  சொந்த முயற்சி போன்றவற்றில் தொடர்ந்து பயிற்சி செய்தால் எந்த சூழ்நிலையிலும் கியர்களை மிக இலகுவாகவும் ,வேகமாகவும் மாற்றி நம்மால் அடுத்த நிலைக்கு செல்ல இயலும்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுவது என்பது என்றைக்குமே முழுதாக முடிவடைந்து விட்ட ஒன்றாக எந்த ஓட்டியும் கருதுவதற்கு வாய்ப்பில்லை.. ஒவ்வொரு நாளும் புதிய அனுபவத்தை பைக் ரைடர்கள் பெற்று கொண்டே இருப்பது உண்மைதானே…ரைடர்களே…

உங்கள் அனுபவத்தினை மற்றவர்களுக்கு உதவிகரமானதாகவும் மாற்றிக்கொள்ள உங்கள் கருத்துகளை மறக்காமல் கமென்ட்ஸ் பன்னுங்க கீழுள்ள பாக்சில்.. பதிவு செய்க..