பைக் செயின் பராமரிக்க சில டிப்ஸ்

0
பைக்கை மிக சிறப்பாக கண்டிசனாக வைத்து கொள்வதற்கு பராமரிப்பில் மிக முக்கியமானதாக விளங்கும் பைக் செயின் பராமரிப்பு செய்வது, பைக் செயினில் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகளை கானலாம்.
post first tme published Mar 11 , 2013 – updated
bike chain

பைக் செயின் ஆற்றலை சக்கரங்களுக்கு கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எஞ்சினில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலே செயின் வழியாக பைனல் டிரைவாக மாறுகின்றது. எனவே செயின் பராமரிப்பு எவ்வளவு அவசியம் என்பது தெரிகின்றதுதானே.

மிக அதிகப்படியான அழுத்தம், புழுதிகள், தேய்மானம் என பல்வேறுவிதமான பாதிப்புக்குள்ளாகும்.முறையாக பைக்கின் செயினை பராமரித்தால் தேவையற்ற சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். மேலும் பைக் செயின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும். முறையான பராமரிப்பு அற்ற செயின்கள் பல்வேறு விதமான கூடுதல் செலவுகளை தரும். பாதி வழியில் அறுந்து விடலாம் அதிகப்படியான ஸ்பராக்ட்ஸ் அல்லது செயினை மாற்ற வேண்டிய நிலைக்கு வரலாம்.

Google News
chain brush clean

பைக் செயின் பராமரிப்பு செய்வது எப்படி

 

 

  • பைக்கினை மெயின் ஸ்டான்டில் நிறுத்தி நியூட்ரல் கியரில் இலகுவாக பின்புற சக்கரம் சுலபமாக சுற்றும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
  • மிக கடினமான பிரஷ்களை கொண்டு செயினில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குங்கள். ஸ்பராக்ட்ஸ்க்கு இடையே விரல்களை பயன்படுத்திர்கள்.
  • செயின் சுத்தம் செய்வதற்க்கு செயின் கிளினர் என்ற கிளினர் விற்பனை செய்யப்படுகின்றது. அவற்றை வாங்கியோ அல்லது செயின் சுத்தம் செய்ய மண்ணெய் , டீசல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  • பைக் செயினை பராமரிப்பிற்கு என விற்க்கும் செயின் ஆயில்களை வாங்கி பயன்படுத்துங்கள். உராய்வின் பொழுது சுலபமாக செயின் இயங்கும்.
  • அதிகப்படியான ஆயிலை செயினில் விடாதீர்கள். செயினில் வறட்சி ஏற்பட்டால் மீண்டும் ஆயிலை பயன்படுத்துங்கள்.

உங்கள் மனதில் உள்ள ஆட்டோமொபைல் தொடர்பான கேள்விகளுக்கு மோட்டார் டாக்கீஸ் பகுயில் பதிவு செய்யுங்கள்.