பிரேக் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கான உயிர்நாடி என்றே சொல்லாம். அந்த அளவிற்க்கு பைக் பிரேக் மிக முக்கியமானது. பைக் பிரேக்யில் பராமரிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகளை கானலாம்.
பொதுவாக பைக்குகளில் இரண்டு வகையான பிரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் ஆகும்.
டிஸ்க் பிரேக்
தற்பொழுது அதிகப்படியான மோட்டார் சைக்கிள்களில் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்படுகின்றன. முன்புற சக்கரங்களுக்கு அதிகப்படியான வாகனங்களுக்கு டிஸக் பிரேக் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல புதிய பைக்குகளில் பின்புறமும் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்படுகிறது.
கவனிக்க வேண்டியவை
[alert-note]பிரேக் திரவம்[/alert-note]
- முக்கியமாக டிஸ்க் பிரேக்களில் பிரேக் ஆயிலை சரியான அளவுகளில் பராமரித்தல் மிகவும் அவசியமானது.
- சரியான அளவுகளை தொடர்ந்து கண்கானிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
- பிரேக் திரவத்தின் கலனை திறக்கும் பொழுது மிக கவனமாக திறத்தல் அவசியமாகிறது.
- பிரேக் திரவம் வண்டியின் பாடி பேனல் அல்லது பெயின்ட பூசப்பட்ட பகுதிகளில் பட்டால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும்.
[alert-note]பிரேக் பேட்[/alert-note]
- பிரேக் திரவத்தை தொடர்ந்து பிரேக் பேடினை பராமரிப்பது மிகவும் அவசியமானதாகும்.
- பிரேக் பேட் மிகவும் அதிகப்படியான அழுத்தங்களால் தொடர்ந்து தேய்மானமடையும் என்பதால் கவனமாக கண்கானிக்க வேண்டும்.
- பிரேக் பேட் முனைகளை சரிபார்த்தல் அவசியம். தேய்மானத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
- 3mm விட மெலிதாக பேட் இருந்தால் உடனடியாக பேட் மாற்ற வேண்டும்.
- எக்காரணம் கொண்டு தரமற்ற பிரேக் பேட் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
ட்ரம் பிரேக்
இந்த வகையான பிரேக் பழமையானதாகும். அதிகப்படியான வாகனங்களில் இயங்கி வரும் பிரேக் ஆகும். இதில் உள்ள பிரேக் ஷூ ஆனது உராய்வினை ஏற்படுத்தி சக்கரத்தின் சுழற்ச்சியை தடை செய்யும்.
[alert-note]கவனிக்க வேண்டியவை என்ன[/alert-note]
- பிரேக் ஷூ தேய்மானத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
- அதிகப்படியான தேய்மான ஆன பிரேக் ஷூவை உடனடியாக மாற்ற வேண்டும்.
- ட்ரம் பிரேக் உட்புறத்தில் தங்கும் தூசுகளை மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.
உங்களுக்கு தெரிந்த பிரேக் குறிப்புகள் மற்றும் ஆட்டோமொபைல் சார்ந்த அனுபவங்களை அனுப்பி வைக்க admin (at) automobiletamilan.com