தூய்மையாக பைக்கினை பராமரிப்பதின் மூலம் உங்கள் பைக் தொடர்ந்து புதிய பொலிவுடன் காட்சியளிக்கும். எவ்வாறு பைக் பெயின்ட் பராமரிக்கலாம் என்பதனை கானலாம்.
1. சுத்தமாக வைத்திருங்கள்
வேக்ஸ் பயன்படுத்தினால் பைக்கின் பொலிவினை தொடர்ந்து பராமரிக்கலாம். வேக்ஸ் பல பிராண்ட்களில் விற்பனையில் உள்ளன. இவற்றை வாங்கி பயன்படுத்துங்கள். மெழுகு பயன்படுத்தினால் பெயின்ட் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் தொடர்ந்து பொலிவுடன் விளங்கும்.
3. மூடி வையுங்கள்
பைக்கினை கழுவிய பின்னர் அல்லது வேக்ஸ் மூலம் சுத்தம் செய்த பின்னர் பார்க்கிங் கவர்களை பயன்படுத்தினால் தேவையற்ற தூசுகள் படருவதை தவிர்க்கலாம். எப்பொழுதும் பைக்கினை பயன்படுத்தாமல் இருக்கும் பொழுது மூடி வைப்பது நல்லது.
அதிகப்படியான வெயில் அல்லது குளிர் அல்லது மழையில் வாகனத்தை நிறுத்தாதீர்கள்.
4. ஸ்கிராட்ச் விழுந்தால்
என்னதான் பாதுகாப்பாக வைத்தாலும் உங்க மேலே இருக்க கோவத்தாலா யாராவது கீறிட்டா என்ன பன்றது.. அவங்களையே ஸ்கிராட்ச் ரீமுவர் வாங்கி தர சொல்லுங்க. ஸ்கிராட்ச் விழுந்துட்டா அதற்க்கென விற்க்கப்படுகிற ரீமுவரை பயன்படுத்துங்கள். இதனால் பைக்கின் பெயின்ட் பாதுகாக்கலாம்.