பைக் ரேஸ் வீரராக உருவாகுவது எப்படி – மோட்டார் ரேஸ்

100சிசி பைக்கிலே வித்தை காட்டும் வல்லவர்களும் உள்ள நம்ம ஊரில் முறையான பயிற்சி பெற்ற பைக் ரேஸ் வீரராக உருவாகும் வழிமுறை என்ன ? இந்தியாவில் பைக் ரேஸ் வீரர் ஆகுவது எப்படி என்ற கேள்விகளுக்கு விடை தரும் வகையில் இந்த சிறப்பு கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

Yamaha YZF R3

 

சமீபகாலமாக இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்போர்ட்டிவ் பைக்குகளுக்கான சந்தையில் பல சூப்பர் பைக்குகள் இந்தியாவில் கிடைக்க தொடங்கி உள்ளநிலையில் தொழிற்முறை பைக் ரேஸ் வீரராக கலந்து கொள்வதற்கு நாம் எந்த மாதிரியான தகுதிகளை வளர்த்து கொள்ளலாம் என பார்க்கலாம்.

Suzuki GSX R1000

மோட்டார் ஸ்போர்ட் அத்தாரிட்டி இந்தியா

இந்தியாவின் மோட்டார்ஸ் ஸ்போர்ட் ஒட்டுநர் உரிமத்தினை FMSCI  (FMSCI -Federation Of Motor Sports Clubs Of India) வழங்குகின்றது. இந்தியாவில் நடைபெறும் அனைத்தும் விதமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயங்களுக்கு அனுமதி மற்றும் ரேஸ் வீரர்க்கு உண்டான உரிமங்களை வழங்கி வருகின்றது.  FMSCI அமைப்பின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே அனைத்து ஒட்டுநர் உரிமம் , பந்தயத்தில் பங்கேற்க்கும் வகையிலான அனுமதிக்கப்பட்ட தரமான ஹெல்மெட் , ரைடிங் கியர் எனப்படும் உடைகளை போன்றவற்றை கொண்டு பங்கேற்க முடியும்.

BMW R nineT Racer

FMSCI  லைசென்ஸ்

பைக் ரேஸ் வீரர் ஆவதற்கான முதல் தேவையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கூட்டமைப்பு இந்தியா வழங்கும் உரிமம் ஆகும்.  உரிமத்தை பெறுவதற்கு அடிப்படையான டூ வீலர் ஒட்டுநர் லைசென்ஸ் அல்லது இளம் பருவத்தினர் (15 வயதுக்கு மேல் உள்ளவர்கள்) அல்லது உரிமம் இல்லாதவர்கள் மோட்டார் ஸ்போர்ஸ் லைசென்சுக்கு விண்ணப்பிக்க பெற்றோர் அல்லது தங்களின் காப்பாளர்களின் அத்தாட்சியுடன் அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டிக்கான லைசென்ஸ் வழங்குவதற்கு நடக்கும் சோதனைகள் மற்றும் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு FMSCI Competition Licence வழங்கப்படும். வழங்கப்பட்டுள்ள ஒட்டுநர் உரிமத்தை கொண்டு தயாரிப்பாளர்கள் நடத்தும் பிரசத்தி பெற்ற ஒன்மேக் ரேஸ் போன்ற பந்தயங்களில் கலந்துகொள்ளலாம்.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பொருந்தும் முழுமையான விதிமுறைகள் ஆன்லைன் விண்ணப்பம் , கட்டணம் , உடற்தகுதி குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள fmsci இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

2017 Suzuki GSX R1000R

 

பைக் ரேஸ் பயிற்சி பள்ளிகள்

பைக் ரேஸ் பள்ளிகளில் பங்கேற்று முறையான பயற்சி எடுத்து கொண்டு போட்டிக்கான லைசென்ஸ் பெற முயற்சி செய்தால் மிக எளிதாக தேர்வினை எதிர்கொள்ள இயலும். ஆனால் இந்தியாவில் மிக குறைந்த அளவிலான பைக் பந்தய பயிற்சி பள்ளிகள் உள்ளன. சில முக்கியமான பள்ளிகளின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தளங்களுக்கு சென்று பயிற்சி விதிமுறைகள் மற்றும் கட்டணம் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.

1. Throttle Wide Open (T.W.O) Riding School at the Kari Motor Speedway in Coimbatore.
2. Apex Racing Academy at the Kari Motor Speedway, Coimbatore, Tamil Nadu.
3. California Superbikes Schools (CSS) Chennai
4. Honda Ten 10 Racing Academy
5. MMSC Racing Academy at the Madras Motor sports track, Chennai.

அபேக்ஸ் ரேசிங் பள்ளி மிக சிறப்பான பங்களிப்பினை வழங்கிவரும் பைக் ரேஸ் பயிற்சி பள்ளியாகும். விதிமுறைகள் , பயிற்சிகள் , கட்டணம் போன்றவற்றை தெரிந்து கொள்ள http://apexracing.in/costing

பயிற்சி பள்ளிகள் அனைத்தும் மிக சிறப்பான ரேஸிங் நுனுக்க பயிற்சியை வழங்கி வருகின்றது. மோட்டார் சைக்கிள் ரேஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹோண்டா மற்றும் யமஹா நிறுவனங்களின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

யமஹா ஒன்மேக் ரேஸ் விபரங்கள் :

ஹோண்டா ஒன்மேக் ரேஸ்  visit:http://www.honda2wheelersindia.com/onemakerace/

இந்தியாவில் நடைபெறும் அனைத்து மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டினை ஒருங்கினைப்பது மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் கூட்டமைப்பு இந்தியா ஆகும். இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதனால் உங்களின் திறமைகள் வாயிலாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும்…..

வாழ்த்துக்கள்….