அமெரிக்காவின் ப்ரோடெர்ரா எலக்ட்ரிக் பஸ் தயாரிப்பாளரின் கேட்டலிஸ்ட் E2 (Catalyst E2) என்ற பெயரில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்தினை வடிவமைத்துள்ளது. கேட்டலிஸ்ட் E2 பஸ்சை ஒரு முறை சார்ஜ் செய்தால் 563 கிலோமீட்டர் தொலைவு வரை பயணிக்கலாம் என ப்ரோடெர்ரா தெரிவித்துள்ளது.
ப்ரோடெர்ரா
கேட்டலிஸ்ட் E2 பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள 660 கிலோவாட் (660kW) பேட்டரியின் வாயிலாக சோதனையின் அடிப்படையில் 965 கிமீ வரை பயணிக்கலாம். எனவும் பொது பயன்பாட்டுக்கு சாலைகளில் இயக்கும் பொழுது 312 கிமீ முதல் 563 கிமீ வரை பயணிக்கலாம் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கேட்டலிஸ்ட் E2 பேருந்தில் 42 இருக்கைகளை பெற்று 40 இருக்கைகள் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் எடையை குறைப்பதற்க்காக கார்பன் ஃபைபர் பாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளதால் 18,000 எடையை கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் பெட்ரோல் , டீசல் மற்றும் சிஎன்ஜி போன்ற எரிபொருக்கு மாற்றாக மின்சாரம் நிலைநிறுத்தப்பட உள்ளதால் வாகனங்களினை அதிக தொலைவு பயணிக்க வைப்பதற்கு பலகட்ட சோதனைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. பொதுபோக்குவரத்தின் தேவைகளுக்கு ஏதிர்காலத்தில் எல்க்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதனால் அனைத்து முன்னனி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களும் பைக் , கார் , பஸ் மற்றும் டிரக்குகள் என அனைத்திலும் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான வாகனங்களை வடிவமைப்பதில் மிகுந்த தீவரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.