மஸராட்டி சூப்பர் கார் ஷோரூம் திறப்பு

0
மஸராட்டி சூப்பர் காரின் முதல் சேவை மையம் புது டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது. மஸராட்டி கார்கள் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
மஸராட்டி சூப்பர் கார் ஷோரூம்
மஸராட்டி சூப்பர் கார் ஷோரூம்
புது டெல்லியில் உள்ள மதுரா சாலையில் ஏஎம்பி சூப்பர்கார்ஸ் என்ற டீலரை தனது முதல் ஷோரூமாக மஸராட்டி நியமித்துள்ளது.  ஜிப்லை, குவாட்ரோபோர்ட்டே , கிரான் டூரீஷ்மோ மற்றும் கிரான் கேப்ரியோ  என மொத்தம் 4 கார்களை விற்பனை செய்ய உள்ளது.
ரூ.1.1 கோடி விலையில் தொடங்கி ரூ.2.2 கோடி வரையிலான விலையில் மஸராட்டி கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த கார்கள் அனைத்திலும் மிகவும் சக்திவாய்ந்த என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில் மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் தனது சேவை மையங்களை திறக்க மஸராட்டி முடிவு செய்துள்ளது. ஃபெராரி நிறுனத்தின் துனை நிறுவனமாக மஸராட்டி செயல்படுகின்றது.
ஃபெராரி மற்றும் மஸராட்டி என இந்த இரண்டு சூப்பர் கார் நிறுவனங்களின் தலைமை ஃபியட் கிறைஸலர் நிறுவனம் ஆகும். 
கிரான் கேப்ரியோ
கிரான் கேப்ரியோ ஸ்போர்ட்