மஸ்டாங் சூப்பர் கார் இந்தியா வருவது உறுதியானது

0
ஃபோர்டு நிறுவனத்தின் மஸ்டாங் சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்வது உறுதியாகியுள்ளது.

ஃபோர்டு மஸ்டாங்

அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் மிக சிறப்பான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தும் மஸ்டாங் காரினை முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

பல சிறப்பம்சங்களை கொண்ட மஸ்டாங் காரின் 6வது தலைமுறை மாடல் தற்பொழுது விற்பனையில் உள்ளது. மிகவும் நேர்த்தியான உட்கட்டமைப்பு அழகான ஃபூளூடிக் தோற்றம் என பல அம்சங்களை கொண்ட காராகும்.

மூன்று  விதமான என்ஜின் வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஸ்டாங் கார் இந்தியாவில் 306பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் வகையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

296பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 3.7 லிட்டர் வி6 என்ஜின் வகை மற்றும் 429பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 5.0 லிட்டர் வி6 வகை என்ஜினும் உள்ளது.

8 காற்றுப்பைகள் , ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா , இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன்களை போன்றவை முக்கிய அம்சங்களாகும்.

முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வருவதனால் விலை ரூ.50 லட்சத்தினை எட்டும். மேலும் இந்த வருடத்தில் ஃபோர்டு நிறுவனம் ஃபிகோ ஆஸ்பயர் , புதிய ஃபிகோ மற்றும் புதிய என்டோவர் எஸ்யூவி என மொத்தம் நான்கு மாடலை விற்பனைக்கு கொண்டு வருகின்றது.

மேலும் வாசிக்க

ஃபிகோ ஆஸ்பயர் விபரம்

source:autocarindia