மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டரின் சிறப்பு எடிசன் அறிமுகம்

0

பண்டிகை காலத்தை ஒட்டி மஹிந்திரா டூ வீலர் நிறுவனத்தின் மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டரில் சிறப்பு பதிப்பில் கூடுதலாக இரு வண்ணங்களை சேர்த்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கஸ்ட்டோ விலை ரூ. 52.010 ஆகும்.

முந்தைய 6 வண்ணங்களுடன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள நீலம் (pacific matte blue) மற்றும் சிவப்பு ( crimson matte red) வண்ணங்களில் வந்துள்ளது.  அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பு எடிசன் மாடல்களில் கால் வைக்கும் இடத்தில் பீஜ் மற்றும் மேட் பேனல்களை பெற்றுள்ளது.

Google News

கஸ்ட்டோ ஸ்கூட்டரில் 8 குதிரை சக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் 110சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 9 என்எம் ஆகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.  இருக்கை உயரம் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி , ஃபிளீப் கீ , ஃபைன்ட் மீ லேம்ப் , கிக் ஸ்டார்ட் மற்றும் எல்இடி விளக்கு என பல நவீன வசதிகளை பெற்றுள்ளது.

பேடிஎம் தளத்தின் வாயிலாக ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். சிற்ப்பு எடிசன் மாடல் VX வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். கஸ்ட்டோ பைக் விலை ரூ. 52.010 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆகும்.