மஹிந்திரா டியூவி300 இரட்டை வண்ணத்தில் அறிமுகம்

மஹிந்திராவின் டியூவி300 எஸ்யூவி காரின் 100 bhp T8 டாப் வேரியண்டில் இரட்டை வண்ண கலவையில் ரூ.9.30 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாதரன மாடலை விட ரூ.15,000 கூடுதலாக இரட்டை வண்ண கலவை மாடல் அமைந்துள்ளது.

சில்வர் மற்றும் கருப்பு வண்ண கலவையில் அமைந்துள்ள மாடலில் தோற்றத்தில் அனைத்து வேரியன்டிலும் மேற்கூறை கருப்பு அல்லது வெள்ளை ஆப்ஷன்களில் கிடைக்கும். இதனை மஹிந்திரா ஜெனியூன் ஆக்செரீஸ் வாயிலாக வழங்கப்பட உள்ளது.  கருப்பு வண்ணம் முகப்பு பம்பர் , ஏ-பில்லர் , ஓஆர்விஎம் போன்ற இடங்களில் உள்ளது.

மற்றபடி எவ்விதமான மாற்றங்களும் இல்லை. இன்ஜின் ஆப்ஷனில் எம்ஹாக் 80 மற்றும் எம் ஹாக்100 என இரு இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்ற டியூவி300 காரில் 100 BHP மற்றும் 240 Nm டார்க் வழங்கும் எம்ஹாக்100 மற்றும் 84 BHP , 230 Nm டார்க் வழங்கும் எம்ஹாக் 80 போன்றவற்றில் 1.5லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

மஹிந்திரா டியூவி T8 100 BHP  விலை ரூ.9.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Share