மஹிந்திரா தார் டேபிரேக் எடிசன் கஸ்டமைஸ் விலை விபரம்

0

பிரபலமான மஹிந்திரா தார் எஸ்யூவி மாற்றியமைக்கப்பட்ட மஹிந்திரா தார் டேபிரேக் பதிப்பின் கஸ்டமைஸ் கட்டணம் ரூ.9.60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தார் டேபிரேக் கஸ்டமைஸ் காலம் 2 மாதங்களாகும்.

mahindra thar daybreak edition

Google News

மஹிந்திரா கஸ்டமைசேஷன் பிரிவினால் தார் எஸ்யூவி காரை தனிபயனாக்கம் செய்து தரப்பட உள்ளது. தார் எஸ்யூவி மற்றும் 9.60 லட்சம் கொடுத்து இரு மாதங்கள் காத்திருப்புக்கு பின்னர் கஸ்டமைஸ் செய்யப்பட்ட தார் டேபிரேக் எஸ்யூவி கிடைக்கும். மேலும் மேற்கூறை திடமானதாக மாற்ற கூடுதலாக 1.50 லட்சம் செலுத்தப்பட வேண்டும். தார் டேபிரேக் மாடலை பதிவு மற்றும் காப்பீடு செய்ய இயலும்.

தார் டேபிரேக் எஸ்யூவி காரில் எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் செய்யப்படுவதில்லை. மேட் கிரே வண்ணம் , ஃபேக்டரியில் பொருத்தப்பட உள்ள இழுவைக்கான கருவி மற்றும் ஸ்டிங்கர் பம்பர் , வட்ட வடிவ எல்இடி வளையங்களை கொண்ட ஹெட்லைட் , எல்இடி டெயில் லைட் , காற்று செல்ல வழிவகுக்கும் ஸ்கூப் பானெட் மேல் பொருத்தப்பட்டிருக்கும். ரேஸ் பகெட் இருக்கைகள் , 4 வாட்டர் ப்ரூஃப் ஸ்பீக்கர்கள் என பல வசதிகளை பெற்றிருக்கும்.

எந்த சாலைகளிலும் பயணிக்கும் வகையில் மிக பலமான திறனை கொண்ட 37 இன்ச் மேக்சிஸ் டிரிப்டோர் டயர்கள் பொருத்தப்படும். இந்த டயர்களின் வாயிலாக வாகனத்தின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிப்பதுடன் எஸ்யூவி தோற்றம் மிக பெரிதாக காட்சி தருகின்றது. பின்புறத்தில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட இரு புகைப்போக்கி போன்றவற்றை பெற்றிருக்கும்.  கஸ்டமைஸ் செய்யப்பட்ட தார் டேபிரேக் எஸ்யூவி வாயிலாக மிக சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தினை பெறலாம்.  தார் எஸ்யூவி காரில் 105 bhp பவர் மற்றும் 247 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

mahindra-thar-daybreak-edition-rear