பண்டிகை காலத்தை முன்னிட்டு குறைவான அறிமுக விலையில் வந்த மஹிந்திரா மோஜோ பைக்கின் விலை ரூ.5000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மோஜோ பைக் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.
முதற்கட்டமாக டெல்லி , மும்பை , புனே மற்றும் பெங்களூரு என 4 நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள மோஜோ பைக்கிற்க்கு சிறப்பு சலுகைகளை அறிமுகத்தின்பொழுது வழங்கி குறைவான விலை மஹிந்திரா வெளியிட்டது.
அறிமுகத்தின் பொழுது நீட்டிக்கப்பட்ட இரண்டு வருட வாரண்டி , மோஜோ ரைடிங் ஜாக்கெட் மற்றும் இரண்டு வருட சாலையோர உதவி திட்டம் போன்றவை வழங்கப்பட்டது. தற்பொழுது இந்த சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளது.
27 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 30என்எம் டார்க் வழங்கும் 300சிசி என்ஜின் மோஜோ பைக்கில் உள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
விற்பனையிலுள்ள 4 நகரங்களை தவிரத்து மற்ற நகரங்களில் வரும் 2016ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் ஏபிஎஸ் மாடலும் வரவுள்ளது.
மஹிந்திரா மோஜோ பைக்கின் புதிய விலை ரூ.1,63,000 (எக்ஸ்ஷோரூம் டெல்லி)
Mahindra mojo bike price hike upto Rs.5000