![]() |
மஹிந்திரா மோஜோ பைக் |
மஹிந்திரா மோஜோ பைக்கின் அனைத்து விபரங்களும் வெளியாகிவிட்ட நிலையில் வரும் அக்டோபர் 16ந் தேதி முதல் டெலிவரி செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
27பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 29.4என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
மஹிந்திரா மோஜோ பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கலாம்.
மோஜோ பைக்கின் முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர். ஏபிஎஸ் ஆப்ஷனாலாக இல்லை.
மஹிந்திரா மோஜோ பைக்கினை ரூ.20,000 செலுத்தி முன்பதிவு செய்து கொண்டால் சிறப்பு பரிசுகள் உள்ளதாம்.
மேலும் படிக்க ; மஹிந்திரா மோஜோ முழுவிபரம்
மஹிந்திரா மோஜோ பைக் விலை ரூ.1,62,500 எக்ஸ்ஷோரூம். ஆன்ரோடு விலை ரூ. 1.92 லட்சத்திற்க்குள் இருக்கும். (மும்பை விலை)
மோஜோ பைக் முதற்கட்டமாக டெல்லி , மும்பை , புனே மற்றும் பெங்களூரு நங்கரங்களில் வரும் 16ந் தேதி விற்பனைக்கு வருகின்றது. சென்னை , கோல்கத்தா , கொச்சின் , ஹைத்திராபாத் மற்றும் அகமதபாத் போன்ற நிறுவனங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாம். மேலும் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட மாடலும் அடுத்த வருடம் விற்பனைக்கு வருகின்றது.
Mahindra Mojo price leaked