மாருதி ஆல்டோ 30 லட்சம் கார்களை கடந்தது

2 Min Read

இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றிலே முதன்முறையாக 30 லட்சம் கார்களை விற்பனை செய்து மாருதி ஆல்டோ புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 2000த்தில் விற்பனைக்கு வந்த ஆல்டோ கடந்த 15 வருடங்களுக்கு மேலாக முன்னிலை வகித்து வருகின்றது.

ஆல்ட்டோ

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 3 ஆண்டுகளில் அதாவது 2003-2004 ஆம் நிதி ஆண்டில்  1 லட்சம் கார்களை கடந்தது. கடந்த 10 வருடங்களாகவே மாதம் சராசரியாக 20,000 கார்கள் தொடர்ந்து விற்பனை செய்து மாத விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தினை பெற்று வருகின்றது.

ஆல்டோ விற்பனை பற்றி சில முக்கிய குறிப்புகள்

2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

2003-2004யில் முதல் 1 லட்சம் விற்பனையை கடந்தது.

2006-2007யில் 5 லட்சம் கார்களை கடந்தது.

விரைவாக 2008-2009யில் முதல் 10 லட்சம் கார்கள் விற்பனை செய்தது.

2010-2011 ஆம் நிதி ஆண்டில் 15 லட்சம் கார்கள் மற்றும் கூடுதல் ஆற்றலை வழங்கும் ஆல்டோ கே10 மற்றும் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு வந்தது.

2012-2013 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை ஆல்டோ 800 வந்தது.

2013 – 2014 ஆம் வருடத்தில் 25 லட்சம் கார்கள் என்ற விற்பனை எண்ணிக்கையை கடந்தது.

2014-2015 ஆம் ஆண்டில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வந்தது. மேலும் ஆப்ஷனல் ஏர்பேக் இணைக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஆல்டோ 800 கார் இந்தியா மட்டுமல்லாமல் 70க்கு மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதுவரை  3.80 லட்சம் கார்கள் இலங்கை . அல்ஜிரியா , பிரிட்டிஷ் என பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்டள்ளது.

ஆல்டோ காரில் இருவிதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 800சிசி என்ஜின் 48 PS ஆற்றலை வெளிப்படுத்தும். ஆல்டோ கே10 மாடல் 68 PS ஆற்றலை வெளிப்படுத்தும். இதில் 5வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.

 

 

 

 

Share This Article
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.