மாருதி சுசூகி எர்டிகா எம்பிவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இன்று நடைபெற்ற இந்தோனேசியா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யயப்பட்டுள்ளது. புதிய மாருதி எர்டிகா இந்தியாவில் இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்.
மாருதி சுசூகி எர்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட மாடலில் தோற்றம் மற்றும் உட்புறம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும்.
புதிய எர்டிகா தோற்றத்தின் முகப்பில் மூன்று குரோம் ஸ்லாட்களுக்கு மத்தியில் சுசூகி லோகோ பதிக்கப்பட்டுள்ளது. பனி விளக்குகள் அறையில் குரோம் பட்டை போன்றவை இணைக்கப்பட்டுள்ளது. முகப்பு விளக்கு மற்றும் பானெட்டில் எந்த மாற்றங்களும் இல்லை.
பின்புறத்தில் நீளமான குரோம் பட்டை சேர்க்கப்பட்டுள்ளது. அதன் மேலே எர்டிகா என எழுதப்பட்டுள்ளது. மேலும் ரிஃபெலக்ட்ர் சேர்க்கப்பட்டுள்ளது. டெயில் விளக்குகள் மற்றும் பின்புற பம்பரினை பதுப்பிக்கப்பட்டுள்ளது.
உட்புறத்தில் இரட்டை வண்ண டேஸ்போர்டு , புதிய அப்ஹோல்ஸ்ட்ரி , எலக்ட்ரிக் ஃபோல்டிங் மிரர் , ஒன் புஸ் வின்டோ ஒட்டுநர் இருக்கைக்கு , என்விஎச் லெவல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முந்தைய என்ஜின் ஆற்றலில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை. ஆனால் எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கப்பட்டிருக்கும்.
புதிய மாருதி எர்டிகா எம்பிவி அக்டோபர் மத்தியில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.
Maruti Ertiga facelift officially revealed at IIMS 2015