மாருதி சியாஸ் ஹைபிரிட் விரைவில்

மாருதி சியாஸ் செடான் காரின் ஹைபிரிட் மாடல் இன்னும் சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரலாம். மாருதி சுசூகி சியாஸ் SHVS என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ளது.
மாருதி சியாஸ் ஹைபிரிட்

புதிய மாருதி சியாஸ் ஹைபிரிட் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். VDi + என்ற வேரியண்டில் தற்பொழுது ஹைபிரிட் மாடல் வரவுள்ளதாக தெரிகின்றது.

1.3 லிட்டர் என்ஜினுடன் லித்தியம் ஐன் பேட்டரி பன்படுத்தப்பட்டிருக்கும். மேலும் மாருதி சியாஸ் காரின் மைலேஜ் லிட்டருக்கு 26.2கிமீ ஆகும். வரவிருக்கும் ஹைபிரிட் சியாஸ் லிட்டருக்கு 30 கிமீ தரலாம் என தெரிகின்றது.

மாருதி சுசூகி சியாஸ் SHVS என்ற பெயரில் வரவுள்ளது. சியாஸ் SHVS என்றால் Smart Hybrid Vehicle by Suzuki ஆகும்.

சுசூகி SHVS நுட்பத்தில் கூடுதல் ஆற்றல் மற்றும் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மினி ஹைபிரிட் அமைப்பில் இன்ட்கிரேட்டடு ஸ்டார்ட்ர் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது

மேலும் தற்பொழுது விற்பனையில் உள்ள சாதரன டீசல் மாடல் நிறுத்தப்படலாம் என தெரிகின்றது.  தோற்ற அமைப்பில் மாறுதல்கள் இல்லை. ஆனால் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம்.

டீலர்களிடம் டெலிவரி செய்ய தொடங்கப்பட்டுள்ளதால் மிக விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள டீசல் மாடலை விட ரூ.80,000 முதல் 1.5 லட்சம் வரை கூடுதலாக இருக்கும். மேலும் நெக்ஸா மையங்களில் விற்பனை செய்யப்படலாம்.

Maruti Suzuki Ciaz hybridh  to launch shortly

Exit mobile version