மாருதி சுசூகி எஸ் கிராஸ் எஸ்யுவி சிறப்பம்சங்கள்

0
வரவிருக்கும் மாருதி சுசூகி எஸ் கிராஸ் எஸ்யுவி கார் இன்னும் சில வாரங்களில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது. எஸ் கிராஸ் இரண்டு விதமான டீசல் என்ஜின் ஆப்ஷனில் வரவுள்ளது பெட்ரோல் மாடல் தாமதமாக விற்பனைக்கு வரும்.

மாருதி சுசூகி எஸ் கிராஸ்
மொத்தம் 5 வேரியண்டில் 8 விதமான வரிசைகளில் எஸ் கிராஸ் வரவுள்ளது. சிக்மா , சிக்மா (O) , டெல்டா , ஜெட்டா , மற்றும் ஆல்ஃபா ஆகும். இவற்றில் 1.3 லிட்டர் DDiS 200 என்ஜின் அனைத்து வேரியண்டிலும் டாப் வேரியண்ட்களான டெல்டா , ஜெட்டா , மற்றும் ஆல்ஃபா போன்றவற்றில்  1.6 லிட்டர் DDiS 320 என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
எஸ் கிராஸ் சிக்மா
இந்த மாடலில் ஸ்டீல் வீல் ஓட்டுநருக்கான காற்றுப்பை , முன்பக்க டிஸ்க் பிரேக் , பவர் விண்டோ , கீலெஸ் என்ட்ரி , சென்ட்ரல் லாக்கிங் , இருக்கை பட்டை எச்சரிக்கை போன்ற வசதிகள் இருக்கும்.
எஸ் கிராஸ் சிக்மா (O)
எஸ் கிராஸ் எஸ்யூவி சிக்மா வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக முன் மற்றும் பின் பக்கங்களில் டிஸ்க் பிரேக் , முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் பிரேக் வசதிகள் உள்ளன.
எஸ் கிராஸ் டெல்டா
 சிக்மா (O) வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக ரூஃப் ரெயில் , சிடி பிளேயர் , யூஎஸ்பி , பூளூடூத் தொடர்பு , ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடு பொத்தான்கள் , ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உடன் இணைந்த டிஸ்பிளே , திருட்டை தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு போன்றவை உள்ளன.
மாருதி சுசூகி எஸ் கிராஸ்
எஸ் கிராஸ் ஜெட்டா
டெல்டா  வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக ஆலாய் வீல் , பனி விளக்குகள் , பின்புற இருக்கை பட்டைகளுக்கும் ரீக்லைனிங் (விபத்தின் பொழுது இருக்கை பட்டை பூட்டிகொள்ளும் அம்சம்) வசதி , ரிவர்ஸ் கேமரா , நேவிகேஷன் அமைப்பு ,  ரியர் வைப்பர் மற்றும் வாஸர் , குரல் வழி கட்டளை , ஸ்மார்ட் போன் தொடர்பு என பல நவீன சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.
எஸ் கிராஸ் ஆல்ஃபா
மாருதி சுசூகி எஸ் கிராஸ் காரின் டாப் வேரியண்டில் ஜெட்டா வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக லெதர் அப்ஹோல்சரி , லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் , HID புராஜெக்டர் முகப்பு விளக்கு , தானியங்கி முகப்பு விளக்கு , மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.
மாருதி எஸ் கிராஸ் எஸ்யூவி என்ஜின் விபரம்
மாருதி சுசூகி எஸ் கிராஸ்
மாருதி எஸ் கிராஸ் எஸ்யுவி மாருதி பிரிமியம் சேவை மையங்களான நெக்ஸாவில் மட்டுமே முன்பதிவு மற்றும் விற்பனை செய்யப்பட உள்ளது.
upcoming Maruti Suzuki S-Cross SUV variant details