மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் ரக எஸ்யூவி காருக்கு ரூ. 21,000 செலுத்தி மாருதி சுசூகி டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரில் டீசல் என்ஜின் பொருத்தப்படிருக்கும்.
கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் முதன்முறையாக பார்வைக்கு வந்த விட்டாரா பிரெஸ்ஸா காரில் 88.5 bhp ஆற்றல் மற்றும் 200 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் DDiS 200 என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும்.
மார்ச் மத்தியில் அதிகார்வப்பூர்வமாக சந்தைக்கு வரவுள்ள மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா கார் விலை ரூ.5.60 லட்சம் முதல் 8.50 லட்சம் வரை இருக்கலாம். LDi, LDi (O), VDi, VDi (O), ZDi, மற்றும் ZDi+ என மொத்தம் 6 விதமான வேரியண்டில் வரவுள்ளது. இவற்றில் டாப் வேரியண்டில் பல நவீன வசதிகளை பெற்றிருக்கும்.
டாப் வேரியண்டில் இரட்டை வண்ண கலவையுடன் விளங்கும் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் 6 வண்ணங்களை பெற்றிருக்கும். டியூவி300 , இக்கோஸ்போர்ட் , டஸ்ட்டர் போன்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கு மிகுந்த சவாலாக விளங்கும்.
முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து வேரியண்டிலும் ஆப்ஷனலாக பெற இயலும்.
வரும் காலத்தில் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்களை தர வாய்ப்புகள் உள்ளது. ஆனால் எப்பொழுதைக்கு வரும் என்பதற்கான உறுதியான தகவல் இல்லை. முதன்முறையாக இந்திய மாருதி சுசூகி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையால் முழுமையாக உருவாக்கப்பட்ட வாகனமாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விளங்குகின்றது.
[envira-gallery id=”5777″]