மாருதி சுஸூகி கார் உற்பத்தி தொடக்கம்

மாருதி சுஸூகி கார் நிறுவனத்தின் மானசேர் மற்றும் குர்கான் ஆலைகள் பராமரிப்பு பணிகளின் காரணமாக தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் மாருதி சுஸூகி ஆலைகள் உற்பத்தி தொடங்கிவிட்டது.

new-Maruti-Alto-800

ஒரு நாளைக்கு சுமார் 5000 கார்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ள இரு தொழிற்சாலைகளும் சேர்த்து ஆண்டுக்கு 15 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும்.

இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மானசேர் மற்றும் குர்கான் ஆலைகளில் இந்த வருடத்தின் ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் முன்கூடிய தொடங்க காரணம்  மாருதி நிறுவனத்தின் முக்கிய உதிரிபாங்கள் தயாரிப்பாளரான சுப்ரோஸ் ஆட்டோ ஏர்கன்டிஷன் சிஸ்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஜூன் 6 முதல் 11 வரை தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்டு  பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டிருந்தது.

மாருதி சுஸூகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யுவி மற்றும் பலேனோ  போன்ற கார்கள் அபரிதமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதனால் காத்திருப்பு காலம் 6 மாதம் முதல் 9 மாதம் வரை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க ; பலேனோ காரின் சிறப்புகள் என்ன