மாருதி சூப்பர்கேரி மினிடிரக் விபரம் – தென்ஆப்பரிக்கா

0

மாருதி சுசூகி சூப்பர்கேரி மினிடிரக்கின் படங்கள் மற்றும் நுட்ப விபரங்களை மாருதி சுசூகி வெளியிட்டுள்ளது. மாருதி சூப்பர்கேரி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென்ஆப்பரிக்காவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Maruti-Suzuki-Super-Carry

Google News

வருகின்ற 2016 ஜூன் மாத மத்தியில் தென்ஆப்பரிக்கா சந்தையில் சுசூகி ஆட்டோ SA நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட உள்ள சூப்பர்கேரி டிரக் சிறிய ரக தொழில் முனைவோர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும்.

750 கிலோ பேலோடினை கொண்டுள்ள மினிடிரக் 3.8 மீட்டர் நீளம் கொண்டதாகும். இதன் பொருள் ஏற்றும் கார்கோ பாக்ஸ் அளவு 2.18 X 1.49 மீட்டர் ஆகும்.  175 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது. தென்ஆப்பரிக்கா சந்தையில் 72 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் GB14 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 110 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

Maruti-Suzuki-Super-Carry-Interior

தென்ஆப்பரிக்கா சந்தையில் சுசூகி சூப்பர்கேரி விலை 1,29,000 ரெனட் (இந்திய மதிப்பில் ரூ.5.58 லட்சம் )

இந்தியாவில் இந்த வருடத்ததின் இறுதியில் டாடா ஏஸ் , மஹிந்திரா ஜீட்டோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக மாருதி சூப்பர்கேரி 800சிசி டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடலாக மிகுந்த சவாலான விலையில் அதிகபட்ச எரிபொருள் சிக்கனத்தினை வழங்கும் மாடலாக வரவுள்ளது.