மாருதி ஜிப்ஸி விடை பெறுகின்றது

0
மாருதி நிறுவனத்தின் மிக பிரபலமான ஜிப்ஸி ஆஃப்ரோடு வாகனம்  இராணுவத்தில் பெரிய பங்கு வகித்து வருகின்றது. தற்பொழுது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு சில அடிப்படை வசதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால் ராணுவத்தில் இருந்து ஜிப்ஸி விடைபெறும்
Maruti Suzuki Gypsy

இராணுவ வாகனங்களுக்கான புதிய நிபந்தனைகள

1. பாதுகாப்பு வசதிகள் இருத்தல் அவசியம். குறிப்பாக டூவல் காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் இருக்க வேண்டும்.

2. குறைந்தபட்ச ஆற்றல் 120 பிஎச்பி வெளிப்படுத்த வேண்டும்.

3. ஏசி போன்ற வசதிகளும் அவசியமாகின்றன.

4. 800 கிலோ எடையினை சுமக்கும் திறன் கொண்டதாக இருத்தல் அவசியம்.

5. சென்டர் லாக், 5 கதவுகள்,மற்றும் பவர் வின்டோ

இவற்றை அவசியம் வாகனங்கள் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஜிப்ஸி இது போன்ற தகுதிகளை நிறைவேற்ற தவறுவதால் இராணுவத்தில் இருந்து ஜிப்ஸின் பயன்பாட்டினை குறைத்து மாற்று வாகனங்களை தேர்வு செய்வது அவசியமாகிறது.

பல்வேறு இராணுவ பயன்பாடுகளுக்காக 30,000 வாகனங்கள் வாங்க ரூ 3000 கோடியினை ஒதுக்கியுள்ளனர். இதனை கைப்பற்ற டாடா சுமோ, நிசான் எக்ஸட்ரெயில் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ போன்ற கார்கள் போட்டிக்கு இறங்கியுள்ளன.

மாருதி ஜிப்ஸி

மாருதி சுசுகி ஜிப்ஸி 1985 முதல் இந்தியாவில் விற்பனையில் உள்ளது. 4 வீல்டிரைவினை கொண்ட ஜிப்ஸி 80 பிஎச்பி ஆற்றலை வெளிப்பட்டுத்தக்கூடிய 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி ஜிப்ஸி சுமக்கும் திறன் எடை 500 கிலோ மட்டுமே.

இதனால் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து மாருதி ஜிப்ஸி விடை பெறுகின்றது.