மாருதி நெக்ஸா பிரிமியம் டீலர்கள் அறிமுகம்

0
மாருதி சுசூகி நிறுவனம் பிரிமியம் கார் மாடல்களுக்கு நெக்ஸா சேவை மையத்தினை திறந்துள்ளது. மாருதி எஸ் கிராஸ் காரினை முதல் மாடலாக நெக்ஸா டீலர் வழியாக விற்பனை செய்ய உள்ளனர்.

மாருதி நெக்ஸா பிரிமியம் டீலர்கள்
மாருதி நெக்ஸா பிரிமியம் டீலர்கள்

இன்னும் 6 முதல் 8 மாதங்களுக்குள் 30 நகரங்களில் 100க்கு மேற்பட்ட டீலர்களை திறக்க உள்ளனர். பிரிமியம் கார்களான எஸ் கிராஸ் , வரவிருக்கும் YRA  பிரிமியம் ஹேட்ச்பேக் மற்றும் YBA எஸ்யுவி போன்றவை நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்படும்.

நெக்ஸா சேவை மையங்கள் வழியாக சிறப்பான சேவையை வாடிக்கையாளர்கள் பெரும் வகையில் செயல்படும். நெக்ஸா ஷோரூம்களில் மிக நவீன டிஜிட்டல் நுட்பத்தில் கார்களின் விவரங்களை மிக தெளிவாக பெற்று கொள்ள முடியும்.

மேலும் வாசிக்க ; மாருதி எஸ் கிராஸ் விபரம்

மேலும் ஐ பேட் மற்றும் எல்சிடி திரை போன்றவற்றின் உதவியுடன் வாடிக்கையாளர்கள் மாருதி நெக்ஸா பிரிமியம் ஷோரூமில் உள்ள மாடல்களின் விவரத்தினை அறிய முடியும்.

Maruti Nexa premium dealership launched in New Delhi. Nexa dealers will sell it first model S-Cross.