மாருதி பலேனோ காருக்கு சிறப்பான வரவேற்பு

0

மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் பிரிமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ காருக்கு மிக சிறப்பான வரவேற்பினை பெற்று நாள் ஒன்றுக்கு 1000 முன்பதிவுகளை பெற்று விற்பனைக்கு வந்த 40 நாட்களில் 40,000 க்கு மேற்பட்ட  பலேனோ கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாருதி பலேனோ
மாருதி பலேனோ கார்

நெக்ஸா டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் பலேனோ காரில் சிறப்பான பிரிமியம் அம்சங்களுடன் சவாலான விலையில் ஸ்விப்ட் காருக்கு மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

Google News

எலைட் ஐ20 , ஜாஸ் , போலோ போன்ற கார்களுக்கு போட்டியாக வந்த பலேனோ காருக்கு கிடைத்துள்ள அபரிதமான வரவேற்பினால் எலைட் ஐ20 காரின் விற்பனை சரிய வாய்ப்புகள் உள்ளது.

மேலும் படிக்க ; மாருதி பலேனோ Vs போட்டியார்கள் – ஒப்பீடு

பலேனோ காரின் வெற்றிக்கு பின்னால் இருப்பது சிறப்பான மைலேஜ்  அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் , போட்டியாளர்களை விட குறைவான விலை , மாருதியின் வலிமையான சர்வீஸ் மையங்கள் முக்கிய காரணமாகும்.

84.3பிஎஸ் ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 115என்எம் மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 21.4கிமீ ஆகும். 75பிஎஸ் ஆற்றலை வழங்கும் 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 190என்எம் மற்றும் மைலேஜ் லிட்டருக்கு 27.39கிமீ ஆகும்.

புராஜெக்டர் முகப்பு விளக்கு , எல்இடி பகல் நேர விளக்கு , ஸ்மார்ட்பிளே இன்போடெயின்மென்ட் வசதி  , ஆப்பிள் கார் பிளே ஆப் , மேலும் அனைத்து வேரியண்டிலும் ஏபிஎஸ் இபிடி மற்றும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் என பல குறிப்பிடதக்க வசதிகளை பெற்றுள்ளது.

Maruti Baleno gets 40,000+ bookings

மாருதி பலேனோ கார் படங்கள்

[envira-gallery id=”3876″]