மாருதி S-கிராஸ் கிராஸ்ஓவர் முன்பதிவு தொடங்கியது

மாருதி எஸ் கிராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் S கிராஸ் எஸ்யூவி நெக்ஸா டீலர் வழியாக மட்டுமே முன்பதிவு செய்யப்படுகின்றது.

மாருதி S-கிராஸ் எஸ்யூவி

மாருதி எஸ் கிராஸ் கிராஸ்ஓவர் கார் மிக சிறப்பான இடவசதி , தரம் மற்றும் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த காரில் உள்ள பல நவீன வசதிகள் மற்றும் சொகுசு தன்மை கொண்டதாக இருக்கும்.

1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் என இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது. ஆனால் உறுதியான என்ஜின் ஆப்ஷன் இன்னும் தெளிவாக தெரியவில்லை. மெனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்சிலும் வரலாம்.

மேலும் இந்திய மாருதி எஸ் கிராஸ் புராஜெக்டர் முகப்பு விளக்குகள் , பகல் நேர எல்இடி விளக்குகள் , க்ரூஸ் கட்டுப்பாடு , இஎஸ்பி , தொடுதிரை அமைப்புடன் கூடிய நேவிகேஷன் அமைப்பு , 16 இஞ்ச் ஆலாய் வீல் , 4 வீலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும். ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் தாமாதாக அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

எஸ் கிராஸ் என்ற பெயரிலே  விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள இணையத்தில் எஸ் கிராஸ் கிராஸ்ஓவர் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

சியாஸ் மற்றும் எஸ் கிராஸ் மாருதி நெக்ஸா டீலரில் மட்டுமே இனி விற்பனை செய்யப்படும். எஸ் கிராஸ் ஜூலை மத்தியில் விற்பனைக்கு வருகின்றது.

மாருதி S-கிராஸ் கிராஸ்ஓவர் விலை ரூ.8 லட்சம் முதல் 12 லட்சத்திற்க்குள் இருக்கும்.

முன்பதிவு செய்ய http://s-cross.in/

Maruti S-Cross bookings begin