மெக்லாரன் 10,000 கார்கள் உற்பத்தி சாதனை

0

உலக பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் கார் தயாரிப்பாளர்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் மெக்லாரன் நிறுவனம் 5 ஆண்டுகளில் 10,000 கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஃபார்முலா 1 பந்தயங்களில் இடம்பெறுகின்ற அதிநவீன நுட்பங்களை கொண்டு இந்த கார்கள் வடிவமைக்கப்படுகின்றது.

mclaren rolls out 10000th car

Google News

லம்போர்கினி மற்றும் ஃபெராரி போன்ற சூப்பர் ஸ்போர்ட்டிவ் கார் தயாரிப்பாளர்களுக்கு மிக கடுமையான சவாலாக அமைந்துள்ள மெக்லாரன் நிறுவனம் ஜூலை 2011 முதல் அதாவது கடந்த 5 ஆண்டுகளாக முழுவீச்சில் உற்பத்தி நிலை கார்களை விற்பனை செய்து வருகின்றது. உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து சூப்பர் ஸ்போர்ட்டிவ் கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் லம்போர்கினி மற்றும் ஃபெராரி கார் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளது.

மெக்லாரன் 570S ஸ்போர்ட்ஸ் வரிசை மாடல் 10,000வது காராக சிறப்பு வாகன தயாரிப்பு பிரிவில் வெளிவந்துள்ளது.  வந்துள்ள 10,000வது காரினை விற்பனை செய்ய மறுத்துள்ளது. இந்த காரினை தனது பாரம்பரிய சின்னமாக பாதுகாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

540C, 570S, மற்றும் 570GT போன்ற மாடல்கள் பிரசத்தி பெற்று விளங்குகின்றது.  முதல் 5000 கார்மாடல்களை 42 மாதங்களிலும் அடுத்த 5000 கார்களை 22 மாதங்களில் வடிவமைத்து விற்பனை அதிகரிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

570S

இங்கிலாந்தில் அமைந்துள்ள இந்த நிறுவன ஆலையில் நாள் ஒன்றுக்கு 10 கார்கள் வரை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.இதனை 20 கார்கள் உயர்த்த மெக்லாரன் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் லம்போர்கினி மற்றும் ஃபெராரி போன்ற நிறுவனங்கள் தங்களுடைய சந்தையை விரிவுபடுத்தி வருகின்றது. எனவே இந்திய சந்தையிலும் இந்த நிறுவனம் அதிகார்வப்பூர்வமாக தனது விற்பனை மையத்தை அடுத்த சில ஆண்டிகளில் திறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

McLaren 10000 570s