ஏஎம்ஜி ரக பெர்ஃபாமென்ஸ் மாடலான ஜிடி எஸ் காரின் பெரும்பாலான தாத்பரியங்கள் பிரபலமான எஸ்எல்எஸ் ஏஎம்ஜி மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது.
510பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி8 4.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 650என்எம் ஆகும். இதில் 7 வேக இரட்டை கிள்ட்ச் கியர்பாக்ஸ் உள்ளது.
0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு வெறும் 3.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மெர்சிடிஸ் AMG GT-S காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 310கிமீ ஆகும்.
சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை தரவல்ல மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுவதனால் ரூ.2 கோடியில் விற்பனைக்கு வரலாம்.
Mercedes AMG GT-S sportscar launch tommrow