மெர்சிடிஸ் பென்ஸ் உற்பத்தி அதிகரிப்பு

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மெர்சிடிஸ் பென்ஸ் GLA எஸ்யூவி மாடலும் இந்தியாவிலே அசெம்பிள் செய்ய தொடங்கியுள்ளதால் விலை குறைந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் உற்பத்தி அதிகரிப்பு
மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார்

ரூ.1000 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சக்கன் ஆலையில்  தொடங்கப்பட்டுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இரண்டாவது பிரிவு ஆலை மூலம்  GLA எஸ்யூவி கார் ஒருங்கினைக்கப்படுகின்றது.

C கிளாஸ் , E கிளாஸ் , M கிளாஸ் , S கிளாஸ் மற்றும் GL கிளாஸ் கார்களை தொடர்ந்து 6வது காராக GLA எஸ்யூவி இந்தியாவிலே அசெம்பிள் செய்ய தொடங்கியுள்ளனர். ஆண்டிற்க்கு 10,000 கார்களாக இருந்த மெர்சிடிஸ் பென்ஸ் உற்பத்தி தற்பொழுது 20,000 கார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் GLA எஸ்யூவி இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படுவதனால் இதன் விலை மற்றும் காத்திருப்பு காலம் போன்றவை குறைந்துள்ளது. முதற்கட்டமாக டீசல் மாடல் மட்டும் அசெம்பிள் செய்ய தொடங்கியுள்ளனர். பெட்ரோல் மாடல் இன்னும் சில மாதங்களில் உற்பத்தி தொடங்கும். இதனை தொடர்ந்து CLA காரும் அசெம்பிள் செய்ய உள்ளனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் GLA எஸ்யூவி
மெர்சிடிஸ் பென்ஸ் GLA எஸ்யூவி

மெர்சிடிஸ் பென்ஸ் GLA எஸ்யூவி காரில் 134எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் GLA எஸ்யூவி விலை (ex-showroom, Pune)

GLA 200 CDI Style – Rs 31.31 லட்சம்

GLA 200 CDI Sport – Rs 34.25 லட்சம்

Mercedes-Benz increase production capacity in India. GLA SUV locally assembled.