மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சொகுசு கார் பிரிவில் முன்னிலை நிறுவனமாகும். தனது போட்டியாளர்களான ஆடி, பிஎம்டபிள்யூ, ஜெஎல்ஆர்(ஜாகுவார் லேண்ட் ரோவர்) போன்ற நிறுவனங்களை சமாளிக்க இந்த வருடத்திற்க்குள் 5 மாடல்களை இந்தியாவில் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு 2013க்குள் வரப்போகும் 5 மாடல்கள் பி-கிளாஸ் டீசல், புதிய ஏ-கிளாஸ், ஜிஎல்-கிளாஸ் இந்த மூன்று இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும். மேலும் ஜிஎல்ஏ எஸ்யூவி மற்றும் சிஎல்ஏ கூப் கார்கள் இந்த வருடத்திற்க்குள் விற்பனைக்கு வரும்.
இந்தியாவிலே கார்களை கட்டமைக்கவும் திட்டமிட்டுள்ளதாம். ஆனால் எந்த வகையான மாடல் என்பதற்க்கான உறுதியான தகவல் இல்லை.
வருகிற மே 16ல் மேம்படுத்தப்பட்ட ஜிஎல்-கிளாஸ் விற்பனைக்கு வருகின்றது.