உலகின் மிக சிறந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுக்கு தனிமதிப்பு உள்ள நிறுவனமாகும். எதிர்கால உலகத்தினை கருத்தில் கொண்டு தானியங்கி காரின் டீசர் படத்தினை வெளியிட்டுள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் தானியங்கி கார்
தானியங்கி கார்களின் மீது நிறுவனங்கள் தனி கவனத்தினை செலுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தானியங்கி காரின் டீசரை வெளிப்படுத்தியுள்ளது.
சென்சார்கள் மற்றும் கேமாராவின் உதவியுடன் நாம் செல்ல நினைக்கும் இடத்திற்க்கு அழைத்து செல்லும் கார்தான் தானியங்கி கார்களாகும்.
மெர்சிடிஸ்-பென்ஸ் வெளியிட்டுள்ள டீசர் படத்தில் மிக நவீன எரோடைனமிக்ஸ் நுட்பத்தால் உருவாக்கப்படும். மேலும் பல நவீன பொழுதுபோக்கு வசதிகளை பெற்ற காராக விளங்கும்.
ஜனவரி 6 முதல் 9 வரை நடக்கவுள்ள 2015 கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் மெர்சிடிஸ் தானியங்கி கார் காட்சிக்கு வரவுள்ளது.
முதன்முதலாக சென்சார்கள், கேமரா போன்றவற்றின் உதவியுடன் இயங்கும் கூகுள் தானியங்கி காரினை பிரபல இனையதளமான கூகுள் முதலில் உருவாக்க தொடங்கியது. தற்பொழுது இந்த கார் சோதனை ஓட்டத்தில் உள்ளது