டெய்ம்லர் நிறுவனத்தின் மெர்சிடிஸ் பென்ஸ் SHD-2436 சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்துள்ளது. பென்ஸ் SHD-2436 சொகுசு பேருந்தின் முதல் பேருந்தை சேலம் கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
சென்னை அருகே உள்ள ஓரகடத்தில் உள்ள டெய்மலர் இந்திய வர்த்தக வாகனங்கள் பிரிவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் SHD-2436 சொகுசு பஸ்சின் நீளம் 15 மீட்டர் ஆகும். இந்த பேருந்து சிறப்பான சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்டதாகும்.
61 இருக்கைகளை கொண்டுள்ள SHD-2436 சொகுசு பேருந்தில் 14 கன மீட்டர் லக்கேஜ் இடத்தினை கொண்டுள்ளது. இந்த பேருந்து மிக சிறப்பான அலுமினயத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது மளேலும் அதிகபட்ச எரிபொருள் சிக்கன்த்தையும் தரவல்லதாகும்.
டெய்மலர் பஸ் பிரிவு தலைமை செயல் அதிகாரி மார்கஸ் முதல் பேருந்தின் சாவியை கேபிஎன் உரிமையாளர் ராஜேஷ் அவர்களிடம் கொடுத்து விற்பனையை தொடங்கி வைத்துள்ளார். கேபிஎன் நிறுவனம் சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்னிந்தியாவின் முதல்தர பேருந்து சேவையை வழங்கும் நிறுவனமாகும்.
டெய்மலர் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் பாரத் பென்ஸ் பெயரில் டிரக்குகள் மற்றும் பேருந்துகளை தயாரிக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் சொகுசு கார்கள் மற்றும் சொகுசு பேருந்தினை விற்பனை செய்து வருகின்றது.