மெர்சிடிஸ் மேபக் S600 , S500 சொகுசு கார்கள் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் மெர்சிடிஸ் மேபக் S600 மற்றும் S500 சொகுசு கார்  ரூ.2.60 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மெர்சிடிஸ் மேபக் S600 மற்றும் S500 செடான் மிக சிறப்பான சொகுசு வதிகளை கொண்டதாகும்.
மெர்சிடிஸ் மேபக் S600
மெர்சிடிஸ் மேபக் S600

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வருடம் 15 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அவற்றில்  13 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

523பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த வி12 6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 830என்எம் ஆகும். இதில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு வெறும் 5 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மெர்சிடிஸ் மேபக் S600  காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆக எலக்ட்ரானிக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் மேபக் S600 மிக நேரத்தியான தோற்றத்தில் மெர்சிடிஸ் எஸ் கிளாஸ் காரை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் முகப்பில் 3 ஸ்லாட்டுகளை கொண்ட அகலமான கிரிலை பெற்றுள்ளது. எஸ் கிளாஸ் காரை விட 207மிமீ  நீளமாக  உள்ளது.

உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதியை கொண்ட காராக மெர்சிடிஸ் மேபக் S600 விளங்கும். மிக தரமான எக்ஸ்கூட்டிவ் இருக்கைகள் , உயர்தர லெதரால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள இன்டிரியரை பெற்றுள்ளது.

மேஜிக் பாடி கன்ட்ரோல் , எல்இடி லைட்டனிங் சிஸ்டம் , 1540 வாட்ஸ் கொண்ட 3டி பர்மேஸ்டர் சவூன்ட் சிஸ்டதை பெற்றுள்ளது. மொத்தம் 24 ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

மெர்சிடிஸ் மேபக் S600 காரில் பாதுகாப்பு வசதிகளுக்கு எந்த குறையும் இல்லை. கார் முழுதும் காற்றுப்பைகளால் சுற்றப்பட்டது போல முன்பக்கம் , பக்கவாட்டு , பின்பக்க என காற்றுப்பைகளால் நிறைந்துள்ளது.

மெர்சிடிஸ் மேபக் எஸ்500

மெர்சிடிஸ் மேபக் எஸ்500 காரில் 455பிஎச்பி ஆற்றலை வழங்கும் வி6 4.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 700என்எம் ஆகும். இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

மேபக் எஸ்500 கார் பாகங்களை தருவித்து இந்தியாவிலே கார்  உற்பத்தி செயப்படுகின்றது.

மெர்சிடிஸ் மேபக் விலை  விபரம்

மெர்சிடிஸ் மேபக் S600 கார் விலை ரூ. 2.60 கோடி

மெர்சிடிஸ் மேபக் S500 கார் விலை ரூ. 1.67 கோடி

 ( புனே எக்ஸ் ஷோரூம் )

Mercedes-Maybach S500 and S600 launched in India 

Exit mobile version