மேஜிக் பாடி கன்ட்ரோல் – மெர்சிடிஸ் பென்ஸ்

0

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் உள்ள மேஜிக் பாடி கன்ட்ரோல் என்றால் என்ன ? மேஜிக் பாடி கன்ட்ரோல் எவ்வாறு செயல்படுகின்றது போன்ற விபரங்களை இந்த பகிர்வில் தெரிந்து கொள்ளலாம்.

2016-Mercedes-A-Class

Google News

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் சிறப்பான சொகுசு தன்மையை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள நவீன அமைப்பான மேஜிக் பாடி கட்டுப்பாடு அமைப்பு சிறந்த சொகுசு பயணத்தினை விரும்புபவர்களுக்கு மிக சிறப்பான அமைப்பாகும்.

மேஜிக் பாடி கன்ட்ரோல் (MAGIC BODY CONTROL) என்றால் சாலைகளின் தன்மைகேற்ப சஸ்பென்ஷன் அமைப்பினை மாற்றிக்கொண்டு பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சொகுசு தன்மையை வழங்குவதாகும்.

செயல்படும் விதம்

வின்ட்ஷில்டு கண்ணாடியில் பொருத்தப்பட்டுள்ள உட்புற கண்ணாடியின் மேல் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்டீரியோ கேமரா உதவியால் சாலையை 15 அடி முதல் 45 அடி வரையிலான தூரம் வரை சாலையை ஸ்கேன் செய்துகொள்ளும்.

magic-body-control

அவ்வாறு ஸ்கேன் செய்த சாலையின் மேப்பினை ஆக்டிவ் பாடி கன்ட்ரோல் அமைப்பின் உதவியுடன் ஏக்டிவ் சஸ்பென்ஷன் அதாவது இயங்கி கொண்டிருக்கும் சஸ்பென்ஷனுகளுக்கு அனுப்பி சாலையின் தன்மைகேற்ப தானாகவே சஸ்ப்பென்ஷன் அமைபின் உயரம் அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்து கொள்ளும்.

மேஜிக் பாடி கன்ட்ரோல் அமைப்பு இவ்வாறு செயல்படுவதனால் பயணிப்பவர்களுக்கு சிறப்பான சொகுசு தன்மை மட்டுமே கிடைக்கும். இந்த சஸ்பென்ஷன் அமைப்பின் மூலம் சுமார் 40மிமீ வரை  உயரத்தி கொள்ள முடியும் என்பதனால் சொகுசு தன்மை நீடித்திருக்கும்.

சாலை குண்டும் குழியுமாக  இருந்தால் அதன் தன்மைக்கேற்ப சஸ்பென்ஷன் அமைப்பு உயர்ந்தும் தாழ்ந்தும் செயல்படும்.

ஏக்டிவ் பாடி கன்ட்ரோல் என்பது வாகனத்தினை நிலைப்பு தன்மையை எந்நேரமும் உறுதி செய்து கொள்ளும் அமைப்பாகும். அதாவது அதிகப்படியான பிரேக்கிங் , வளைவுகள் போன்ற சமயத்திலும் வாகனம் குடைசாயமல் தடுக்கும். ஏக்டிவ் பாடி கன்ட்ரோல் அமைப்பின் அடிப்படையில் உருவான நவீன நுட்பம்தான் மேஜிக் பாடி கன்ட்ரோல் ஆகும்.

மேஜிக் பாடி கன்ட்ரோல் அமைப்பு செயல்படும் வீடியோ பார்க்கவும்

இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்…மீண்டும் மற்றொரு தொழில்நுட்ப பதிவில் சந்திப்போம்…