இந்தியாவின் சொகுசு கார் விற்பனையில் முன்னனி வகிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு பின் சிறப்பான்சேவையை வழங்கும் நோக்கில் புதிய மை மெர்சிடிஸ் – மை சர்வீஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மை மெர்சிடிஸ் – மை சர்வீஸ் திட்டத்தில் டிஜிட்டல் சர்வீஸ் டிரைவ் , பிரிமியர் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் மற்றும் ஸ்டார் ஈஷ் போன்றவற்றை பெறலாம்.
பிரிமியர் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் வாயிலாக வாடிக்கையாளர்கள் இரண்டு மணி நேரத்தில் பென்ஸ் கார்களை சர்வீஸ் செய்து பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் வாயிலாக கால இடைவெளி பரமாரிப்புக்கு மட்டுமே பொருந்தும். இதற்கு பிரத்யேகமாக பயற்சி பெற்றவர் கொண்டு செயல்படுத்தப்படுகின்றது. பெர்ஃபாமென்ஸ் ரக ஏஎம்ஜி வாகனங்களுக்கு பொருந்தாது.
டிஜிட்டல் சர்வீஸ் டிரைவ் வாயிலாக உரிமையாளர்கள் காரின் சர்வீஸ் நிலையை டிஜிட்டல் முறையில் உடனுக்குடன் எஸ்எம்எஸ் , வீடியோ கால் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். மேலும் விர்ச்சுவல் வகையில் வாகனத்தின் சர்வீஸ் செய்வதனை நேரலையாக காண இயலும்.
ஸ்டார் ஈஷ் திட்டத்தின் வாயிலாக சுமார் 45 விதமான சர்வீஸ் பேகேஜ் வழங்கப்படுகின்றது. ரூ.49,000 விலையில் இருந்து தொடங்குகின்றது. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப திட்டங்களை ஆன்லைன் கால்குலேட்டர் மூலம் தேர்வு செய்யலாம். மேலும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 10 வருடம் அல்லது 2,00,000 லட்சம் கிமீ வரையிலான திட்டமும் உள்ளது.
பயன்படுத்திய கார்களை வாங்கிய இரண்டாவது உரிமையாளர்களுக்கும் இந்த திட்டம் கிடைக்கும். மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுக்கு மூன்று வருடம் மற்றும் வரையற்ற கிமீ வாரண்டி நிரந்தர அம்சமாக உள்ளது. மேலும் விபரங்களுக்கு உங்கள் டீலரை அனுகுங்கள்.