வரும் செப்டம்பர் 1, 2019 முதல் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் 2019 நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராத கட்டணம் பல மடங்காக உயரவுள்ளது.
குறிப்பாக புதிய மசோதா ஓட்டுநர் உரிமத்தின் வேலிடிட்டி தற்போதைய 20 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக குறைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. 50 வயது முதல் 55 வயது வரையிலான உரிமங்களை புதுப்பிப்பவர்களுக்கு 60 வயது வரை மட்டுமே செல்லுபடியாகும். மேலும், 55 வயதிற்குப் பிறகு உரிமத்தைப் புதுப்பிப்பவர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். மேலும், வாகன உற்பத்தியாளர்கள் குறைபாடுள்ள பொருட்களை விற்றால் வாகனத்தின் முழு விலையையும் திருப்பிச் செலுத்துவார்கள், அதே சமயம் இதுபோன்ற சூழ்நிலையில் அரசாங்கம் அதிகபட்சமாக ₹ 500 கோடி வரை அபராதம் விதிக்கலாம்.
2019 மோட்டார் வாகன சட்டத்தின் அபராதங்களின் பட்டியல்
வ.எண். | விதி மீறல் (Section) | முந்தைய அபராதம் | புதிய அபராதம் |
---|---|---|---|
1 | பொதுவிதி மீறல் (177) | ₹ 100 | ₹ 500 |
2 | சாலை விதிகளை மீறுவது (177 A) | ₹ 100 | ₹ 500 |
3 | முறையான வாகன உரிமம் இல்லாமல் இயக்குவது (180) | ₹ 1,000 | ₹ 5,000 |
4 | ஓட்டுநர் உரிமம் இல்லாமல் (181) | ₹ 500 | ₹ 5,000 |
5 | அதிகாரிகளின் உத்தரவிற்கு கீழ்ப்படியாமை (179) |
₹ 500 | ₹ 5,000 |
6 | குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது (185) | ₹ 2,000 | ₹ 10,000 |
7 | அதிவேகம் அல்லது ரேஸ் (189) | ₹ 500 | ₹ 5,000 |
8 | பர்மீட் இல்லாமல் இயக்குவது (192A) | ₹ 5,000 | ₹ 10,000 |
9 | தேர்ச்சி பெறாமல் வாகனம் ஓட்டுவது (182) | ₹ 500 | ₹ 10,000 |
10 | சீட் பெல்ட் அணியாமல் (194B) | ₹ 100 | ₹ 1,000 |
11 | பெரிதாக்கப்பட்ட வாகனம் (182B) | புதிய விதி | ₹ 5,000 |
12 | ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு
வழி விடாமல்(194E) |
புதிய விதி | ₹ 10,000 |
13 | பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது (178) | ₹ 200 | ₹ 500 |
14 | அதிகவேகம் (183) | ₹ 400 | ₹ 1,000 – ₹ 2,000 |
15 | காப்பீடு இல்லாமல் வாகனம் இயக்குவது (196) | ₹ 1,000 | ₹ 2,000 |
16 | அபாயகரமான முறையில் இயக்குவது (184) | ₹ 1,000 | ₹ 5,000 |
17 | சிறுவர்களால் வாகனம் ஓட்டி ஏற்படும் குற்றங்கள் (199) |
புதிய விதி | ₹ 25,000 (3 வருட ஜெயில்) |
18 | அதிக பளூ (194) | கூடுதல் டன் | ₹ 20,000 – ₹ 2,000/Tonne |
19 | அதிக பயணிகள் (194A) | புதிய விதி | ₹ 1,000/passenger |
20 | இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் டூ வீலரில் பயணிப்பது (194C) | ₹ 100 | 3 மாதம் ஓட்டுநர் உரிமம் தடை |
21 | Offences Committed By Enforcing Authorities (210B) | புதிய விதி | Twice The Amount Under Relevant Section |
22 | வாகனம் ஓட்டும்போது மொபைல் பேசுவது (177) | ₹ 1,000 | ₹ 5,000 |