யமஹா ஃபேஸர்
யமஹா ஃபேஸர் நல்ல மதிப்பினை பெற்று விளங்கக்கூடிய மிக சிறப்பான பைக்காகும். இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற பைக்காகவும் ஃபேஸர் விளங்குகின்றது.
ஃபேஸர் பைக்கில் 153சிசி ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 14 பிஎஸ் மற்றும் 13.6என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். 5 வேக மேனுவல் முடுக்கி பயன்படுத்தியுள்ளனர்.
யமஹா ஃபேஸர் பைக் விலை ரூ.77,941(எக்ஸ்ஷோரூம் சென்னை)
யமஹா ஃபேஸர் லிமிடெட் எடிசன் பைக் விலை ரூ.79,480(எக்ஸ்ஷோரூம் சென்னை)
யமஹா ஃஎப்இசட்
மிக நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று விளங்கும் ஃஎப்இசட் பணத்திற்க்கு ஏற்ற மதிப்பினை தருகின்றது. ஃஎப்இசட் பைக்கும் இளசுகளின் மத்தியில் நல்ல வரவேற்ப்பில் உள்ளது.
ஃபேஸர் பைக்கில் உள்ள அதே 153சிசி ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 14 பிஎஸ் மற்றும் 13.6என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். 5 வேக மேனுவல் முடுக்கி பயன்படுத்தியுள்ளனர்.
ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை
யமஹாவின் ஃபேஸர் மற்றும் ஃஎப்இசட் இரண்டுமே மிக சிறப்பான பைக்காகும். இவற்றில் உங்கள் விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்.
ஹோண்டாவில் ரூ.80,000 விலையில் ஸ்போர்ட்டிவ் பைக்கள் தற்பொழுது விற்பனையில் இல்லை. இதற்க்கு முந்தைய விலையில் சிபி டிரிக்கர் மற்றும் 1 லட்சத்திற்க்கு மேற்பட்ட விலையில் சிபிஆர் 150ஆர் விற்பனையில் உள்ளது.
ரூ 80,000 விலையில் மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பைக் குறித்து நண்பர் வில்வேந்தன் அவர்கள் கேட்டுள்ளார். மேலும் அவர் யமஹா மற்றும் ஹோண்டாவில் மட்டும் பரிந்துரைக்கும்படி கேட்டிருந்தார்.