சமீபத்தில் விற்பனைக்கு வந்த யமஹா FZ25 நேக்டு ஸ்போர்ட்டிவ் பைக்கின் அடிப்படையில்அலங்கரிக்கப்பட்ட அதாவது ஃபேரிங் செய்யப்பட்ட யமஹா ஃபேஸர் 250 அல்லது யமஹா FZ250 பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யமஹா ஃபேஸர் 250
மிக வேகமாக வளர்ந்து வரும் 200 சிசி முதல் 350 சிசி வரையிலான பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட யமஹாவின் எஃப்இசட்25 பைக்கில் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
FZ25 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. 148 கிலோ எடை கொண்ட எஃப்இசட் 25 பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவுகொண்ட எரிபொருள் கலன் மற்றும் 160 மீமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றதாக உள்ளது. ஆனால் இதில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாகவும் வழங்கப்படவில்லை
இந்த பைக்கின் அடிப்படையிலே கூடுதலாக முகப்பில் ஃபேரிங் செய்து ஃபுல் ஃபேரிங் மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் . அவ்வாறு அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இந்த மாடலில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளது, எனவே கூடுதலான கவனத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறக்கூடும். இதுகுறித்து எவ்விதமான அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. யமஹா ஃபேஸர் 250 பைக் வரும்பொழுது சற்று ஃஎப்இசட்25 பைக்கை விட கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்படும்.
[foogallery id=”16177″]