யமஹா ஆர்3 ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை அமோகம்

0

கடந்த ஆகஸ்ட் 2015யில் விற்பனைக்கு வந்த யமஹா R3 தொடக்கநிலை ஸ்போர்ட்டிவ் பைக் சிறப்பான விற்பனை வளர்ச்சியை எட்டியுள்ளது. யமஹா ஆர்3 பைக் விலை ரூ.3.25 லட்சம் ஆகும்.

Yamaha YZF R3

தொடக்கநிலை ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிள் பிரிவில் விற்பனைக்கு வந்த யமஹா YZF-R3 பைக்கில் 42 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இழுவைதிறன் 29.6என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிங்க ; யமஹா ஆர்3 vs கவாஸாகி நின்ஜா 300 vs கேடிஎம் ஆர்சி 390 – ஒப்பீடு

இரட்டை பிரிவு முகப்பு விளக்குகளுடன் நேர்த்தியான டிசைனுடன் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தும் ஆர்3 பைக் இந்தியாவிலே பாகங்களை தருவித்து ஒருங்கினைக்கப்படுவதனால் மிக சவாலான விலையில் அமைந்துள்ளதால் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கடந்த 7 மாதங்களில் 600க்கு மேற்பட்ட மோட்டார்சைக்கிள்கள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் போட்டியாளர்களாக விளங்கும் கவாஸாகி நின்ஜா 300 மற்றும் ஆர்சி390 போன்றவற்றுடன் சந்தையை பகிர்ந்துகொண்டுள்ளது. ஏபிஎஸ் இல்லாத மாடலாகவே இந்தியாவில் ஆர்3 பைக் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் படிங்க : ஆர்3 பைக் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்