கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் ஸ்கூட்டர்களை இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் தயாரித்துள்ளது. 1 மில்லியன் ஸ்கூட்டராக யமஹா ஃபேசினோ மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா யமஹா மோட்டார் கிரேட் டொய்டாவில் அமைந்துள்ள சூரஜ்ப்பூர் ஆலையில் 10 லட்சத்தை ஸ்கூட்டர்கள் தயாரிப்பு எட்டியுள்ளது. தயாரிப்பு வரிசையில் பிரசத்தி பெற்ற பேசினோ ஸ்கூட்டர் மாடல் 1 மில்லியன் ஸ்கூட்டராக வெளிவந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய சந்தையில் முதல் ஸ்கூட்டரை வெளியிட்ட யமஹா தொடர்ச்சியாக ஸ்கூட்டர் சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்றது.
குறிப்பாக யமஹா ரே – இசட் , ரே-இசட்ஆர் , யமஹா பேசினோ , யமஹா சிக்னஸ் ஆல்ஃபா போன்ற ஸ்கூட்டர்கள் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய மட்டுமல்லாமல் நேபால் , இலங்கை ,மெக்சிக்கோ , ஈகுவடார் போன்ற வெளிநாடுகளுக்கு 80,000 ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்துள்ளது.
அனைத்து யமஹா ஸ்கூட்டர்களிலும் 113சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான கிளாசிக் தோற்ற அமைப்பில் சவாலான விலையில் அமைந்துள்ள பேசினோ ஸ்கூட்டர் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற மாடலாக விளங்குகின்றது. இளம் ஆண்களுக்கு ஏற்ற வகையில் வெளியிடப்பட்டுள்ள யமஹா சிக்னஸ் ஆல்பா ஸ்கூட்டரும் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.