யமஹா RX100 பைக்கினை இப்படியும் மாற்றலாமா…!

0

இந்தியர்களின் மனதில் என்றும் நீங்காத இடம்பிடித்த யமஹா RX100 பைக்கினை மிக நேர்த்தியாக கஸ்டமைஸ் செய்து பல சுவாரஸ்யமான முறையில் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அசத்தியுள்ளனர்.

Bull City Customs Yamaha RX135 cafe racer 4

Google News

 

யமஹா RX100

  • 21 ஆண்டுகள் இந்திய சந்தையில் தயாரிக்கப்பட்ட மாடலாக ஆர்எக்ஸ்100 விளங்குகின்றது.
  • 1985 ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கப்பட்டு 1996 ஆம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்டது.
  • தனக்கென தனியான இடத்தை இளைஞர்கள் மனதில் பெற்ற மாடலாக இன்றளவும் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

2 ஸ்ட்ரோக்குகளை கொண்ட 98 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகப்சமாக 11 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 10.39 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது.

Yamaha RX100 Scrambler Custom 1

Yamaha RX100 modified side

உடனடி பிக்கப் என்றால் இன்றும் நினைவுக்கு வருகின்ற யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கினை மிக நேர்த்தியான கஸ்டம் கிட் பாடிகளுடன்  அசத்தாலாக மாற்றியுள்ளனர்.

யமஹா ஆர்எக்ஸ்100 வதந்தி தெரியுமா ?

ஆர்எக்ஸ் 100 பைக் நிறுத்தப்பட்டதற்கு இன்றளவும் பலரிடம் ஒரு வதந்தியான தகவலே உள்ளது, என்னவென்றால் திருடர்கள் , செயின் பறிப்பு திருடர்கள் போன்றோர் அதிகமாக பயன்படுத்தியதனாலே இந்த பைக்கின் உற்பத்தியை நிறுத்தியதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையான காரணம் மாசு தர கட்டுப்பாடு அம்சங்களுக்கு ஏற்ற வகையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தவறியதனாலே யமஹா ஆர்எக்ஸ்100 சந்தையிலிருந்து விடுவிக்கப்பட்டது.

Yamaha RX135 Cafe Racer 1

கஸ்டமைஸ் செய்யப்பட்ட RX100 , RX135 , RXG பைக் படங்கள்

படங்கள் உதவி – ironic , bullcity customs ,rtm designs , iron soul machines