Auto News

யமாஹா குறைந்தவிலை பைக் திட்டம்

யமாஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனியான முத்திரை பதிப்பதற்க்காக மிக சிறப்பான திட்டத்தினை வகுத்து செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 100-110 சிசி பைக் மார்கெட்டினை குறிவைத்து புதிய மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாம்.
இந்த பைக்கானது 100 முதல் 110 சிசி திறன் கொண்ட பைக்காக இருக்கும். மேலும் விலை ஆனது ரூ 40,000 த்திற்க்குள் இருக்குமாறு கவனத்தில் கொண்டு உள்ளதாம்.  மேலும் குறைந்த விலை ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளதாம். இவை 2015 அல்லது 2016 ஆம் ஆண்டிற்க்குள் விற்பனைக்கு வரலாம். இந்த குறைந்த விலை பைக் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளும் ஏற்றுமதி செய்யப்படலாம்.
யமாஹாவின் 100-110 சிசி பைக்கானது ஸ்ப்ளென்டர், டீரிம் யூகா போன்ற பைக்களுக்கு போட்டியாக அமையும். தற்பொழுது விற்பனையில் உள்ள யமாஹா க்ரூஸ், க்ரூஸ் ஆர் போன்றவை குறைவான எண்ணிக்கையிலே விற்பனையாகின்றன.
thanks to autocarpro
Share
Published by
MR.Durai
Tags: Yamaha